அக்ஷயா மாநிலத்திலேயே முதலாவதாக வந்துள்ளார்.
பத்தாம் வகுப்பு தேர்வில் செங்கல்பட்டை சேர்ந்த அக்ஷயா மாநிலத்திலேயே முதலாவதாக வந்துள்ளார். இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. மொத்தம் 8,67,707 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். இதில் 79.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இது 77.6 சதவீதமாக இருந்தது. இவர்களில் மாணவிகள் 83 சதவீதமும் மாணவர்கள் 76 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். செங்கல்பட்டு புனித மேரி பெண்கள் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த எஸ்.அக்ஷயா 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலாவது இடத்தைப் பிடித்துள்ளார். சேரன்மாதேவியைச் சேர்ந்த அமலி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜெசீமா சுலைஹாவும், திருவாரூர் அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த சிவகாமசுந்தரியும், புந்துச்சேரி விவேகானந்தா உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த திவ்யபாரதியும் 489 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். தக்கலை அமலா பள்ளியைச் சேர்ந்த லம்சே, தூத்துக்குடி ஸ்பிக் நகர் பள்ளியைச் சேர்ந்த பாலவித்யா, மயிலாடுதுறை டிபிடிஆர் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தி, கூடலூர் புனித ஜோசப் பள்ளியைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர். கணிதப் பாடத்தில் 2,512 பேரும், அறிவியலில் 66 பேரும், சமூக அறிவியலில் 10 பேரும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு கணிதப் பாடத்தில் 13,033 பேர் நூற்றுக்கு நூறு பெற்றனர். இந்த முறை அது 2,512 ஆகக் குறைந்துவிட்டது.
4 comments:
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சேரன்மாதேவி கல்வி மாவட்டத் தில் படித்த ஒரு மாணவர் 500-க்கு 85 மதிப்பெண்களே பெற்றார். அந்த மாணவர் பெற்ற மதிப்பெண் வருமாறு:-
தமிழ் - 18
ஆங்கிலம் - 28
கணிதம் - 9
அறிவியல் - 7
சமூகஅறிவியல் - 23
மொத்தம் - 85
//கூடலூர் புனித ஜோசப் பள்ளியைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்//
கூடலூரா இல்லை கடலூரா?
வித்தியாசமான செய்திகளை தர்ரீங்க தான், அதுக்குன்னு பாபா இப்படில்லாம் கமண்ற் போட்டு காமிக்கணுமா?
---பாபா இப்படில்லாம் கமண்ட் போட்டு காமிக்கணுமா---
ஏன்? முதலாவது வந்தது செய்தி என்றால், இதுவும் தெரிந்துகொள்ளவேன்டியதுதான்.
Post a Comment