.

Wednesday, June 6, 2007

ஏழு வயதில் மெட்ரிக் தேர்ச்சி! - இந்தியச் சாதனை.


அந்த சிறுமியின் பெயர் சுஷ்மா வர்மா. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்.

மெட்ரிகுலேஷன் படிப்பு

சிறுமி சுஷ்மா 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்தாள். இவளுடைய தந்தை தேஜ் பகதூர் வர்மா. கூலித்தொழிலாளி. தாய் சாயா. குடும்பத்தலைவி.

வறுமை காரணமாக சுஷ்மாவை அவளது பெற்றோர், பள்ளிக்கூடத்தில் சேர்க்கவில்லை. ஆனால் சுஷ்மா பொது அறிவில் சிறந்து விளங்கினாள்.

அவளுடைய கல்வி திறனை பார்த்து பொதுமக்கள் மட்டுமின்றி மாநில பள்ளிக் கல்வித்துறையும் ஆச்சரியத்தில் மூழ்கியது. இதையடுத்து லக்னோ செயின்ட் மீனா பள்ளியில் சுஷ்மாவை 9-ம் வகுப்பில் நேரடியாக சேர்த்துக் கொள்ள கல்வித்துறை அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு அவள் 10-ம் வகுப்பு மெட்ரிகுலேஷன் பரீட்சை எழுதினாள்.

7 வயது சிறுமி மெட்ரிக் எழுதும் தகவல் அறிந்ததும் பத்திரிகைகளும், டி.வி.க்களும் சுஷ்மாவை பற்றி பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. அளவுக்கு அதிமான விளம்பரத்தால் சுஷ்மாவின் திறமை பாதிக்கப்படலாம் என்று பள்ளி நிர்வாகம் கவலை அடைந்தது.

சாதனை

உ.பி.மாநில மெட்ரிகுலேஷன் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் சிறுமி சுஷ்மா 600-க்கு 354 மதிப்பெண்கள் வாங்கி தேர்வு பெற்றாள்.

அவள் இந்தியில் 58, ஆங்கிலத்தில் 60, கணிதத்தில் 66, விஞ்ஞானத்தில் 63, சமூக அறிவியலில் 68, கம்ப்ïட்டர் பாடத்தில் 39 மதிப்பெண்கள் பெற்று இருந்தாள்.

இதற்கு முன்பு பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த துளசி என்ற 9 வயது சிறுமி மெட்ரிகுலேசன் பரீட்சையில் பாஸ் செய்து இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த சாதனையை படைத்த மாணவி என்ற பெருமையை பெற்று இருந்தாள். அந்த சாதனையை இப்போது சுஷ்மா முறியடித்து விட்டாள்.

அவளுக்கு சக மாணவிகள் இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர். சாதனை படைத்த சுஷ்மா கூறுகையில், "கம்ப்ïட்டர் பாடத்தில் மார்க் குறைந்ததால் முதல் வகுப்பில் பாஸ் செய்ய முடியாமல் போய் விட்டதே என்பதுதான் தனது வருத்தம்'' என்று குறிப்பிட்டாள்.

சுஷ்மாவின் குடும்பத்தை பொறுத்தவரை அவள் மட்டுமின்றி அவளுடைய அண்ணன் சைலேந்திரனும் அறிவு ஜீவிதான். இவன் 11-வது வயதில் 12-ம் வகுப்பு பாஸ் செய்து பரபரப்பை ஏற்படுத்தியவன். ஆங்கிலத்தில் இவனுடைய அபார திறமையை பாராட்டி அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அவனுக்கு மேல்படிப்புக்கு இடம் கிடைத்தது. ஆனால் பண வசதி இல்லாததால் அவன் அமெரிக்கா போகமுடியவில்லை.

தினத்தந்தி
அஞ்சல்வழித் தகவல்: நண்பர் 'ஷஃபீக்'

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...