.

Saturday, July 14, 2007

தலித் விவசாயத் தொழிலாளர் மீது துப்பாக்கிச் சூடு: நீதி விசாரணைக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

நாகை மாவட்டத்தில் உள்ள அப்புராசபுரம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் விவசாயத் தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தலித் மக்கள் குடிசை போட்டிருந்த கோவில் நிலத்தை அனுபவித்து வந்த மிராசுதாரர் ராஜாங்கம், 53 தலித் குடும்பங்களுக்கு வீடு கட்ட தகுதியுள்ள மாற்று நிலத்தை மே 21-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் ஒப்பந்தப்படி மிராசுதாரர் மாற்று இடம் அளிக்கவில்லை. அதிகாரிகளும் இடம் அளிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தலித் மக்களின் குடிசைகளை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

ஆனால் கடந்த ஜூன் 28-ம் தேதியன்று, காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் அப்புராசபுரம்புத்தூருக்கு வந்த காவல்துறையினர், குடிசைகளைப் பிரிக்க வலியுறுத்தியுள்ளனர். மறுத்த தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கண்ணீர் புகை குண்டுகளை வெடித்ததோடு, ரப்பர் குண்டுகள் மூலம் துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர். இதில் பலர் காயமடைந்துள்ளனர். இதில் குழந்தை, மாணவர்கள், பெண்கள் உள்பட 14 பேர் மீதும் ஒட்டுமொத்தமாக 42 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு அரசு உத்தவிட வேண்டும். சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...