.

Saturday, July 14, 2007

ஐ.நாவில் இந்தி ஆட்சிமொழி: இந்திய அரசின் முயற்சி

நியூயார்க் நகரில் எட்டாவது உலக இந்தி மாநாடு வெள்ளியன்று ஆரம்பித்துள்ளது. மூன்று கோடி ரூபாய்கள் மக்கள் வரிப்பணத்தை இந்த விழாவிற்காக அரசு செலவழித்துள்ளது. இந்தக் கொண்டாட்டங்கள் இந்தி ஐநாவின் ஆட்சிமொழியாக அலங்கரிக்க முயலும் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் எனக் கருதுகிறது. இந்திய வெளியுறவு துணை அமைச்சர் ஆனந்த் சர்மா உலக அரங்கில் இந்தியா ஆற்றிவரும் பணிகள் பாராட்டப்பட்டுவருகின்றன எனக் கூறினார். உலகம் முழுவதுமிலிருந்து 650 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ள இந்த மூன்றுநாள் மாநாடு ஞாயிறன்று முடிவடைகிறது.

IBNLive.com > India roots for Hindi as official language at UN : Hindi, United Nations, India, official language

5 comments:

G.Ragavan said...

ம்ம்ம்...திரும்பத் திரும்ப இந்திய அரசாங்கம் இதைத்தானே பல வகைகளில் செய்து வருகிறது. எல்லாம் வடக்கத்திக்காரர்கள் செய்வது. அதெப்படி ஒரு குறிப்பிட்ட மொழியை மட்டும் வளர்க்க அரசு இப்படிச் செய்யலாம். இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மணியன் said...

இந்தியா என்றாலே இந்திதான் மொழி என்று மற்ற நாட்டவர்களுக்கு தோற்றத்தை ஏற்படுத்துவதுதான் இன்னும் வருத்தமளிக்கிறது :((

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இந்தியர் குறித்த நிறைய stereotype பிம்பங்கள் வெளிநாட்டவரிடையே உண்டு - இந்தி, இந்துக்கள் (அதுவும் அனைவரும் மாமிசம் சாப்பிடா இந்துக்கள்), பாம்புகள், சாலையில் உலவும் மாடுகள், பாலிவுட் என்று நீளும் பட்டியல்..

Anonymous said...

பின்னே இங்க பேசற 18 மொழியையும் ஐநா வில் ஆட்சிமொழி ஆக்க முடியுமா??

எனக்கு குஷ்வந்த் சிங் சொன்ன நண்டு கதைதான் ஞாபகம் வருகிறது.

குறைந்தபட்சம் ஒரு இந்திய மொழி ஆகிறதே என மகிழுங்கள். தமிழுக்கும் காலம் வரும்

Anonymous said...

ஜனநாயகத்துல எல்லோருக்கும் பேச உரிமை இருக்குது ஆனா முடிவெடுக்கும் உரிமை 'மெஜாரிட்டி' மக்களுக்குத்தான் இருக்குது.

-o❢o-

b r e a k i n g   n e w s...