.

Friday, June 1, 2007

ச: ஆசியாவில் பரவும் புற்றுநோய்

ஆசியாவில் புற்றுநோய் இப்போதிருப்பதைவிட அதிகமான பேரை தாக்குவதற்கான வாய்ப்புக்கள் உருவாகிவருவதாக மருத்துவ வல்லுனர்கள் கருதுகின்றனர்.CNN.com இன் இந்தச் செய்தியின்படி -புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு ஆகியவை பெரும் மக்கள்தொகை, நோய்கிருமிகளால் இறப்பு குறைவு முதலிய காரணிகளுடன் இணைந்து வரும் ஆண்டுகளில் புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக் கூட்டும் என சொல்கிறார்கள். ஆனால் வளர்ந்த நாடுகளைப் போன்றில்லாமல் வளரும் நாடுகளில் மருத்துவ வசதிகள் ஈடுகொடுக்க முடியாது. அங்கு '60,'70களில் இருந்த சூழல் அடுத்த பத்து வருடங்களில் இங்கு நிகழும் எனவும் கருதுகின்றனர். உலகின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரில் 40% பேர் உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் புகை தவிர்த்தல் மூலமே தடுத்திருக்கக்கூடியதாக உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது.

மேல் விவரங்களுக்கு: Asia braces for cancer surge - CNN.com

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...