சேலம், ஜூலை 26: நீதிபதிகளை "அய்யா" அல்லது "சார்" என அழைத்தால் போதும். "மை லார்டு, யுவர் ஆனர்" என அழைக்க வேண்டாம் என வக்கீல்களை இந்திய பார் கவுன்சில் மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் நீதி நிர்வாகம் ஆங்கிலேயேர் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இதில் பணியாற்றும் நீதிபதிகளை "மை லார்டு, யுவர் ஆனர், ஹானரபள் கோர்ட்" என வக்கீல்கள் அழைத்து வருகின்றனர். நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ள வார்த்தைகளை மாற்ற இந்திய பார் கவுன்சில் முன் வந்தது. கடந்த ஆண்டு இது தொடர்பாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இதன்படி உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயம் ஆகியவற்றில் பணியாற்றும் நீதிபதிகளை ஆங்கிலத்தில் "சார்" என்றோ அல்லது இது போன்ற அர்த்தம் வரும்படி அந்தந்த மாநில மொழிகளுக்கு ஏற்ப அழைக்கலாம். இதன்படி தமிழில் நீதிபதிகளை "அய்யா" என்று கூறலாம் என வக்கீல்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் இன்னும் பழைய முறையிலேயே நீதிபதிகளை அழைத்து வருகின்றனர். பார் கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தை கடைபிடிக்கும்படி வக்கீல்களை பார் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதனை பின்பற்றுவதில் வக்கீல்கள் இடையே வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. மூத்த வக்கீல்கள் பழைய முறைப்படியே நீதிபதிகளை அழைக்கின்றனர். புதிதாக வருகிறவர்கள் வேண்டுமானால் "சார்" என அழைக்கட்டும் என கூறுகின்றனர்.
இதுகுறித்து சேலம் குற்றவியல் வக்கீல்கள் சங்க தலைவர் வி.ஆர்.சந்திரசேகர் கூறுகையில், ‘‘பார் கவுன்சில் கூறியபடி "மிஸ்டர் ஜட்ஜ்" என்றோ மரியாதைக்குரிய நீதிபதி என்றோ அழைப்பதில் தவறு இல்லை. காலம் காலமாய் வழக்கத்தில் இருந்த ஒன்றை உடனடியாக மாற்றுவதில் சிரமம் இருக்கலாம். அதே நேரத்தில் காலத்திற்கு ஏற்ப மாறுவதிலும் தவறு கிடையாது’’ என்றார்.
நன்றி:
"தினகரன்"
Thursday, July 26, 2007
நீதிபதியை "சார்" என அழைத்தால் போதும்
Posted by சிவபாலன் at 5:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
6 comments:
அட அவன் விட்டுவிட்டு போய் 60 வருடம் ஆகிறது.. திருந்துங்கப்பா!
This item Already came in 'Satrumun'.
Why repeat?
நீதிபதிகள் இனி 'My Lord' இல்லை-என்பதை ஒன்றரை மாதங்களுக்கு முன்பே சற்றுமுன் சொன்னதை கனம் சிவபாலன் சார் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
அனானி நண்பர்களே
நீங்கள் செய்தியை முழுமையாக படிக்கவில்லை என தோன்றுகிறது. :)
அந்த செய்தி "கேரளா", இது தமிழ்நாடு" :-))
அப்பா எப்படியோ சமாளிச்சாச்சு..!!
ஒரு புரொபசனுலுக்கு எந்த அளவு மரியாதை கொடுக்கப் படுகிறதோ...அந்த அளவு கொடுத்தால் போதும் என்பது என்கருத்து.. சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்யும் அரசு அதிகாரிகளுக்கு...மக்களால் முன்நிறுத்துப்படுபவர்களுக்கு (பிரதிநிதிகள்) கொடுக்கும் அளவுக்கு தேவை இல்லை.
மேலை நாடுகளில் இந்த அதீத மரியாதை இல்லை என்று நினைக்கிறேன்.
அரசியலாக இருந்தாலும், சினிமா, அதிகார மட்டம் என்று எல்லா இடத்திலும் இந்தியாவில் போலியான மிகை மரியாதைகள். இதெல்லாம் தேவையே இல்லை. அதுபோல துஷ்பிரயோகங்களும் அதிகம்.
Post a Comment