கடந்த ஓராண்டாகவே சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் அகில இந்திய மருத்துவ மற்றும் அறிவியல் ஆய்வுக் கழகம் (எய்ம்ஸ்) மேலும் ஓர் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்று சுக்தேவ் தரோட் கமிட்டி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து, கடந்த 8 நாள்களாக எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த டாக்டர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முற்போக்கு டாக்டர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அமைப்பு என்ற போர்வையின் கீழ் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விளக்கமளிக்குமாறு எய்ம்ஸ் இயக்குனர் பி. வேணுகோபாலுக்கு, தேசிய எஸ்.சி., எஸ்.டி. கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், சுக்தேவ் தரோட் கமிட்டி அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எய்ம்ஸ் பேராசிரியர்கள், உள்ளுறை டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் சங்கத்தினர் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இப்பிரச்னை குறித்து எய்ம்ஸ் இயக்குனர் வேணுகோபாலுடன், தேசிய எஸ்.சி., எஸ்.டி., கமிஷன் தலைவர் பூடா சிங் இம்மாதம் 1-ம் தேதிக்குப் பிறகு 2 முறை ஆலோசனை நடத்தியுள்ளார்.
எய்ம்ஸ்-ஸின் 'ஃபுளோட்டிங் ரிசர்வேஷன்' கொள்கை சட்டவிரோதமானது என்று பூடா சிங் கூறியுள்ளதாக எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மீது பாரபட்சம் காட்டுவதாக எழுந்துள்ள புகாரை மறுத்துள்ளார் எய்ம்ஸ் செய்தித் தொடர்பாளர் சக்தி குமார் குப்தா. 1993-ல் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கையை எய்ம்ஸ் முழுமையாகக் கடைப்பிடித்து வருவதாகவும் அவர் கூறினார்.
தினமணி
Govt asks AIIMS to give it information regarding reserved posts - India - The Times of India
The Hindu News :: Govt. to amend law governing AIIMS, PGIMER
News From Sahara Samay:: HC notice to Ramadoss, Thorat
Thursday, July 26, 2007
மேலும் ஒரு சர்ச்சையில் எய்ம்ஸ்
Labels:
இடஒதுக்கீடு,
இந்தியா,
கல்வி,
போராட்டம்,
மருத்துவம்
Posted by Boston Bala at 3:01 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment