.

Thursday, July 26, 2007

1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் ராஜகோபுரத்தில் இடி தாக்கியது

வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அருகே உள்ளது திருமால்பூர் கிராமம். இங்கு வரலாற்று சிறப்பு மிக்க மணிகண்டீஸ்வரர் சிவன்கோவில் உள்ளது. இந்த கோவில் 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.

இந்த கோவில் பராந்தக சோழனால் கட்டப்பட்டது. திருமால் சிவபெருமானிடம் வேண்டி சுதர்சன சக்கரம் பெற்றதனால் இந்த ஊர் திருமால்பேறு என அழைக்கப்பட்டு காலப்போக்கில் மருவி தற்போது திருமால்பூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் 70 அடி உயர ராஜகோபுரம் உள்ளது

நேற்று மாலை 5 மணியளவில் திருமால்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது மணிகண்டீஸ்வரர் கோவிலின் 70 அடி உயர ராஜகோபுரம் மீது பலத்த இடி தாக்கியது.

இதில் ராஜகோபுரத்தின் மேல்பகுதி உடைந்து அதில் இருந்த செங்கற்கள் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு விழுந்தன. ராஜகோபுரத்தின் மேல் உள்ள 5 கலசங்களும் சேதம் அடைந்தன. ராஜகோபுரத்தை சுற்றி பக்கவாட்டில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இடிதாக்கியதால் ராஜகோபுரத்தின் மேல்பகுதி கருகிய நிலையில் உள்ளது.

தினத்தந்தி

1 comment:

சிவபாலன் said...

எனக்கு தெரிந்து இடிதாங்கி வெறும் 5000 ரூ இருந்து 10000 இருக்கும். அப்படி அதை நிறுவி இருந்தால் இது போன்ற புராதாண சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது.

அதுவும் அப்படி நிறுவுவதால், சுற்று வட்டாரம் சுமார் 1 கி.மி. பகுதி மின்னல் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்படும்!

-o❢o-

b r e a k i n g   n e w s...