குடியரசுத் தலைவராக பிரதிபா பாட்டீல் பதவியேற்றதை அடுத்து, சுவையான ஊத்தப்பம் செய்யும் பணியில் ராஷ்டிரபதி பவன் சமையல் கலைஞர்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
"அப்துல் கலாம் இட்லி, தோசை, சாம்பார் வகைகளையே விரும்பி உண்பார். அவர் குடியரசுத் தலைவராக இருந்த வரை ராஷ்டிரபதி பவன் "டைனிங் டேபிள்' தயிர் சாதம், ஊறுகாய், அப்பளம் போன்றவற்றால் நிரம்பி வழியும்" என்று நினைவு கூர்ந்தார் ராஷ்டிரபதி பவன் மூத்த அதிகாரி.
72 வயதான பிரதிபா பாட்டீலுக்கு பிடித்த உணவு ஊத்தப்பம் மற்றும் பருப்புக் கூட்டு. அவருக்குப் பிடிக்காதது கீரை மற்றும் உருளைக்கிழங்கு.
"பிரதிபாவுக்கு எளிமையான உணவுதான் மிகவும் பிடிக்கும். எண்ணெய் மற்றும் நறுமணப் பொருள்கள் அதிகம் சேர்க்காமல் சமைத்த உணவை அவர் விரும்பி உண்பார்" என்றார் ஜெய்ப்பூர் ஆளுநர் மாளிகை தலைமை சமையல் கலைஞர் கைலாஷ்.
அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்த போது, ராஷ்டிரபதி தலைமை நிர்வாக அதிகாரிக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்திருந்தார். அதாவது, ராஷ்டிரபதி பவனில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் சமையல் செய்யப்படும் பொது சமையல் கூடத்திலேயே, தனக்கும் சமையல் செய்ய வேண்டும். தனக்காக தனி சமையல் கூடத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.
அதே போல், இரவில் தான் உணவு சாப்பிடும் வரை மற்ற ஊழியர்கள் காத்திருக்கக் கூடாது. உணவு பரிமாறுவதற்கு ஒருவர் மட்டும் போதும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை அப்துல் கலாம் பிறப்பித்திருந்தார்.
கலாமுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து, அவரிடம் 4 ஆண்டுகள் செயலராக இருந்த பி.எம். நாயர் கூறியது:
வழக்கமாக நள்ளிரவு 1 அல்லது 1.30 மணிக்குத் தான் கலாம் தூங்கச் செல்வார். இருந்தாலும் காலை 6.30 மணிக்கே எழுந்துவிடும் பழக்கம் கொண்டவர்.
கடந்த 2003-ம் ஆண்டு ஜூலை 14 அன்று காலை 8.40 மணிக்கு எனது டேபிளில் இருந்த போன் ஒலித்தது. மறுமுனையில் அப்துல் கலாம். மிஸ்டர் நாயர், எனது படுக்கை அறை ஒழுகுவதால் இரவு முழுவதும் தூங்கவில்லை. அதை சரி செய்து கொடுங்களேன் என்று வழக்கமான மெல்லிய குரலில் பேசினார்.
தினமணி
Thursday, July 26, 2007
இட்லியிலிருந்து ஊத்தப்பத்துக்கு...
Labels:
ஆளுமை,
இந்தியா,
வித்தியாசமானவை
Posted by Boston Bala at 2:41 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
5 comments:
//கடந்த 2003-ம் ஆண்டு ஜூலை 14 அன்று காலை 8.40 மணிக்கு எனது டேபிளில் இருந்த போன் ஒலித்தது. மறுமுனையில் அப்துல் கலாம். மிஸ்டர் நாயர், எனது படுக்கை அறை ஒழுகுவதால் இரவு முழுவதும் தூங்கவில்லை. அதை சரி செய்து கொடுங்களேன் என்று வழக்கமான மெல்லிய குரலில் பேசினார்.//
என்னை நான் கிள்ளிப் பார்த்தேன். இது கனவல்ல!!!
படிக்க மகிழ்வாக இருந்த்து. உத்தமர் ஒருவர் காலத்தில் நானும் வாழ்கிறேன்.
ம்.....
இதுக்கு ஒண்ணும் மெனக்கெடவேணாம். இட்லி மாவையே
ரெண்டு நாள் புளிக்க வச்சாப்போதும்.
வயசான காலத்துலே ரொம்ப எண்ணெய் நல்லதுக்கில்லே(-:
//இரவு முழுவதும் தூங்கவில்லை. அதை சரி செய்து கொடுங்களேன் என்று வழக்கமான மெல்லிய குரலில் பேசினார். //
Simple Man! Wow!
We need to learn lot!!
ராஷ்டிரபதி பவன் ஒழுகியதா? இன்னாய்யா புளுகுறீங்களா? இந்தியாவின் முதல் குடிமகனின் வீடு ஒழுகியதா? அந்தளவுக்கா கவனிக்காமல் இருப்பாங்க.
ABDUL KALAM IS SIMPLE and NON-POLITICAL.
THAT's WHY HE WAS REFUSED FOR A SECOND TERM BY THE POLITICIANS.
Post a Comment