காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்களிடையே நேற்று உரை நிகழ்த்திய அப்துல்கலாம், கவிதை ஒன்றும் வாசித்தார். ஒவ்வொரு மாணவரையும் தொடர்ந்து வாசிக்கவும் கேட்டுக்கொண்டார்:
இறைவா! நீ மனித குலத்தை
சிந்திக்கும் திறனுடன் படைத்துள்ளாய்
ஆராயும் திறனை தந்துள்ளாய்
மனிதன் தைரியத்தன்மை
அடைய உண்மையாய் அருள வேண்டும்!
எந்நாட்டு மக்கள் மனதில் அன்பான
எண்ணங்கள், செயல்கள் ஊற்றெடுக்க வேண்டும்
இந்நாட்டில் பிளவு சக்திகள் முறியடிக்க வேண்டும்
என் தேசத்தில் அனைத்து மத
தலைவர்களுக்கும் நல் அருள் புரிய வேண்டும்!
கொள்கைகளில் வேறுபாடு களைய வேண்டும்
எல்லா அமைப்புகளுக்குள்ளும்
நாட்டு மக்களுக்குள்ளும்
விரோத தன்மையில்லாமல் மக்களை
நல்வழி காட்டுவாயாக!
தனி மனிதனை விட தேசம் முக்கியம்
என்ற எண்ணம் மக்கள், தலைவர்கள்
மனதில் மலர செய்வாயாக!
அமைதி கொழிக்கும் தேசமாக வளர
பாடுபட்டு உழைக்க நல் அருள் புரிவாயாக!
2 comments:
"அப்துல்கலாம் வாசித்த கட்டுரை" என்று தலைப்பிட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
மரியா,
உண்மைதான்.
'பிரபலங்கள் எல்லாம் அறிந்தவர்கள்' என்பதில்லை. ஒரு விஞ்ஞானி ஒரு நல்ல கவிஞராகவும் இல்லாமல் இருக்கலாம், விஞ்ஞானிதானா எனவும் சிலர் கேள்வி எழுப்பலாம்,
கவிதைக்கான இலக்கணம் எது என்றொரு கேள்வியும் முளைக்கலாம்.
எல்லாவற்றையும் கடக்கத்தான் வேண்டியிருக்கிறது, சரியா!
Post a Comment