.

Sunday, July 29, 2007

ஸ்டான்ஃபோர்ட் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா



ஸ்டான்ஃபோர்டில் பெண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது. இந்த போட்டியில் முன்னணி வீராங்கனைகளை தோற் கடித்து சிறப்பாக விளையாடி வரும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சானியா மிர்சா அரை இறுதியில் 8-ம் நிலை வீராங்கனையான சைபிலி பாமரை (ஆஸ்திரியா) எதிர் கொண்டார்.

இதன் முதல் செட்டை சானியா 6-2 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் பாமர் சுதாரித்து ஆடினார். இதனால் விறுவிறுப்பாக இருந்தது. அந்த செட்டை அவர் 7-5 என்ற கணக்கில் வென்றார்.

இருவரும் தலா ஒரு செட் கைப்பற்றியதால் வெற்றியை நிர்ணயிக்கும் இறுதி செட் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த செட்டை சானியா 6-3 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 6-2, 5-7, 6-3.

சானியா குளோவின், ஹிண் டர் தற்போது பாமர் போன்ற முன்னணி வீராங் கனைகளை தோற்கடித்து இறுதிப்போட்டியில் நுழைந் துள்ளார். இதன் மூலம் அவர் தரவரிசையில் முன்னேற்றம் காணுவார்.

சானியாவின் அபாரமான ஆட்டம் இந்திய டென்னிஸ் வரலாற்றில் புதிய மைல்கல்லை ஏற்படுத்தி உள்ளது

மாலைமலர்

Mirza, Chakvetadze win three-setters in Stanford semis

3 comments:

Anonymous said...

கலக்கறே சானியா.

Anonymous said...

இன்னம் அரை மணி நேரத்தில் (3 PM EST) தொடங்க உள்ளது...

அமெரிக்காவில் ESPN 2 வில் நேரடி ஒளிபரப்பு!

வெல்ல வாழ்த்துக்கள்!

நண்பன் said...

சக்தி வானொலியில் 8 மணி செய்தியில் கேட்டது. பின்னர் யாஹூ செய்தியில் வாசித்தது. இப்பொழுது சற்றுமுன்...

வாழ்த்துகள், சானியா - மேலும் மேலும் வெற்றி பெற...

-o❢o-

b r e a k i n g   n e w s...