ஆசியாவின் நோபல் பரிசு என கருதப் படுகின்ற ரமன் மக்சேசே விருது இந்தியாவின் இதழியலாளர் பி.சாய்நாத்திற்கு அவரது சமூக விழிப்புள்ள கட்டுரைகளுக்காகவும் இந்திய கிராமங்களின் ஏழைகளைப் பற்றிய புரிந்துணர்வை எழுப்பியதற்காகவும் வழங்கப் பட்டுள்ளது. ஆந்திர,மகாராட்டிர விவசாயிகளின் பட்டினிச் சாவுகளையும் தற்கொலைகளையும் தேசிய ஊடகங்களுக்கு கொண்டு சென்ற சாய்நாத் முன்னாள் குடியரசுத் தலைவர் வி வி கிரி அவர்களின் பேரனாவார். சென்னையில் பிறந்து லயோலாவிலும் பின்னர் தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பயின்றவர்.
மேலதிக தகவல்களுக்கு: Zee news:P Sainath wins Magsaysay award for journalism
Tuesday, July 31, 2007
இதழியலாளர் பி சாய்நாத்திற்கு இராமன் மக்சேசே விருது
Posted by மணியன் at 8:34 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
2 comments:
அது எப்படீங்க, சொல்லி வெச்ச மாதிரி, இத போல பெரிய எடத்து பிள்ளைகளுக்கு மட்டும் சரியா பெரிய விருதெல்லாம் கிடைக்குது? எல்லாம் மர்மமாவே இருக்குது.
பிபிசி-யில் இருந்து செய்தி நறுக்கு: "இந்தியாவில் ஏற்பட்டுவரும் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சிக்கிடையே கிராமப்புறங்களில் வளர்ந்து வரும் ஏழ்மை நிலையை வெளிக் கொண்டுவரும் ஆணித்தரமான செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதற்காக இந்துப் பத்திரிகையின் கிராமப்புற விவகாரங்களுக்கான செய்தியாளர் பாலகும்மி சாய்நாத்திற்கும் இவ்விருது வழங்கப்படுகிறது."
Post a Comment