.

Wednesday, July 25, 2007

சாத்தான்குளத்தில் 'டாடா' தொழிற்சாலை வருகிறது.

சாத்தான் குளத்தில் டாடா நிறுவனம் கனிமத்தொழிற்சாலை நிறுவ உள்ளதாக தினமலர் செய்தியொன்று தெரிவிக்கிறது:

சாத்தான்குளம் பகுதியில் "இல்மனைட்', "மோனாசைட்' போன்ற கனிமப் படிவங்கள் இயற்கையாகவும் பெருவாரியான அளவிலும் உள்ளன. தற்போது ஒரு சில நிறுவனங்கள் இதை வெளிநாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்து வருகின்றன. இக்கனிமங்கள் சில தனியார் நிறுவனங்களால் சட்ட விரோதமாகவும், அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமலும், உரிய அரசு அனுமதி ஏதுமின்றியும் கடத்தப்படுவதாக தெரியவந்தது.

அணுசக்தி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் கனிமங்களைச் சட்டவிரோதமாக சிலர் வெட்டி எடுப்பதும் அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இத்தகைய சட்டவிரோத ஏற்றுமதியால் அப்பகுதி மக்களுக்கு எவ்வித பொருளாதார பயனும் கிடைக்காமல் தடுக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு "இல்மனைட்' கனிமத்தை அப்பகுதியிலேயே சுத்திகரித்து, மதிப்பூட்டி, "டைட்டானியம் டை ஆக்சைட்' என்ற விலை உயர்ந்த வேதிப் பொருளாக மாற்ற இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய டாடா நிறுவனம் முன்வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், மூவாயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.என அரசு குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"சாத்தான்குளத்தில் "டாடா' நிறுவனம் துவங்க உள்ள "டைட்டானியம் டை ஆக்சைட்' தொழிற்சாலையால் பல பயன்கள் கிடைக்க உள்ளன. இதற்கு தடையாக இருந்தால் நாடு வளர முடியாத நிலையில் வறண்டு கிடக்க நேரிடும்' எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது

2 comments:

ஜீவி said...

சாத்தான்குளம், கூடங்குளம், எதிர்கால
சேதுசமுத்திரத் திட்டம், நந்திகிராம
நிகழ்ச்சிகள்-- இதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. ஆனால் தனியாருக்கு விடாமல், ஒரு 'அரசு
நிறுவன'மான 'டாடா'வுக்குத் தாரை
வார்ப்பதில் சந்தோஷமே.

Anonymous said...

Updated news:

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ள டாடா தொழிற்சாலைக்கு அங்குள்ள மக்கள் மற்றும் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த தொழிற்சாலையை கண்டித்து வரும் ஆகஸ்ட் 3ம் தேதி புதிய தமிழகம் சார்பில் நடைபயண போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். திருநெல்வேலியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார். இந்த நடைபயணம் குட்டத்தில் இருந்து திசையன்விளை வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

-o❢o-

b r e a k i n g   n e w s...