.

Wednesday, July 25, 2007

அபுதாபியில் கட்டப்படும் மிகப்பெரிய மசூதி

40 ஆயிரம் முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தவல்ல மிகப் பெரிய மசூதி, ஐக்கிய அரபு குடியரசின் தலைநகரில் ரூ. 2 ஆயிரத்து 300 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.

ஐக்கிய அரபு குடியரசு நாடுகளின் பிற மாகாணங்களிலிருந்து தலைநகர் அபுதாபி நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் மக்தா முஸ்தபா பாலத்திற்கு அருகே மிகப்பெரிய மசூதி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மசூதியை அமைக்க முன்னாள் அதிபர் மறைந்த ஷேக் சையது பின் சுல்தான் அல் நகியான் விருப்பப்பட்டார். இதுகுறித்து, அவர் தனது வாரிசுகளிடம் கூறியிருந்தார். அவரது கனவை நனவாக்கும் விதத்தில், தற்போது மசூதி அமைக்கப்பட்டு வருகிறது

முதல்கட்டப் பணிகள் வரும் செப்டம்பர் மாதம் முடிவடைந்து விடும். மீதமுள்ள பணிகளை விரைவில் முடித்து விடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மசூதியின் சுற்றளவு 41 ஆயிரத்து 222 சதுர மீட்டர். ஒரே நேரத்தில் 40 ஆயிரம் பேர் தொழுகை நடத்தவும் விசாலமான இடம் உள்ளது. மசூதி அமைக்க திட்டமிடப்பட்டுள்ள தொகை 217 கோடி திர்ஹம் (2,300 கோடி ரூபாய்). முன் ஹாலில் தொழுகைக்கான சிறப்பு அரங்கில் 5 ஆயிரத்து 627 சதுர மீட்டர் பரப்பில் போடப்பட உள்ள தரை விரிப்பு (கார்பெட்) விசேஷமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.இந்த தரைவிரிப்பை கையினால் நெய்யும் பணியில் ஆயிரத்து 200 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான செலவு மட்டும் 32 கோடி ரூபாய்.

நன்றி: தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...