.

Wednesday, July 25, 2007

சி.ஏ. நுழைவுத் தேர்வு பயிற்சிக்கு தனி இணையதளம்

சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்ய புதிய இணைய தளத்தை 'எய்ம்ஸ்' பயிற்சிக் கல்வி நிறுவனம் தொடங்கியுள்ளது.

www.aimseducation.com என்ற இணைய தளத்தை மூத்த சார்டர்ட் அக்கவுண்டன்ட் ஜி.நாராயணசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார். 'தற்போது நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் சி.ஏ. பட்டதாரிகள் உள்ளனர். ஆனால், இன்றைய தேவை 4 லட்சம் ஆகும். இத்தகைய பயிற்சி பெற்று சி.ஏ. முடிப்போருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது' என்றார் அவர்.

சி.ஏ. படிப்பில் சேருவதற்கு 'சி.பி.டி.' (Common Proficiency Test) எனப்படும் நுழைவுத் தேர்வை இந்திய சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் நிறுவனம் நடத்தி வருகிறது. அத்தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்யும் வகையில் மாதிரித் தேர்வை எய்ம்ஸ் கடந்த 22-ம் தேதி சென்னையில் நடத்தியது. அதில், 750 பேர் பங்கேற்றனர். தேர்வு எழுதிய பின்னர் அவர்களுக்கு முன்னணிக் கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள், பட்டயக் கணக்காளர்கள் ஆலோசனைகள் வழங்கினர்.

இணைய தளத்தில் 200 வகையான கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இதற்கும், மாதிரி நுழைவுத் தேர்வுக்கும் கட்டணம் இல்லை என்று 'எய்ம்ஸ்' இயக்குநர் தீபக் சுவாமிநாதன் தெரிவித்தார். மாணவர்களுக்கு சி.ஏ. படிப்புக்கான நுழைவுத் தேர்வு குறித்த பயிற்சியைப் பெறவும், தயார் செய்யவும் மாதிரித் தேர்வு உதவும் என்று 'எய்ம்ஸ்' இயக்குநர் கீதா பிரபு வணிகக் கல்விப் பிரிவு பொறுப்பாளர் சுகன்யா வாசுதேவன் தெரிவித்தனர். எய்ம்ஸ் நடத்தும் சி.ஏ. படிப்புக்கான பயிற்சியில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களும் சேரலாம். ஆனால், 'பிளஸ் 2' முடித்த பிறகுதான் நுழைவுத் தேர்வை எழுதலாம்.

நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி சென்னையில் 5 மையங்களில் மூன்று மாதங்களுக்கு அளிக்கப்படும். இதன்படி ஆண்டுதோறும் 4 அணிகள் பயிற்சி பெறும். இதற்கான கட்டணம் ரூ.6,500.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...