.

Wednesday, July 25, 2007

சபரிமலை பெண்கள் வழிபாடு: கேரள சட்டமன்றத்தில் விவாதம்

கேரள தேவஸ்வம் அமைச்சர் ஜி சுதாகரன்சபரிமலையில் பெண்கள் வழிபட வகைசெய்யவேண்டும் என்ற தங்கள் அரசின் கொள்கைக்கு ஆதரவாக 10-50 வயதுள்ள பெண்கள் அங்கு வழிபட்டதற்கான ஆதாரங்களை சட்டமன்றத்தில் குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்த ஒரு உரிமையை மீட்பதே தவிர எந்த ஒரு வழக்கத்தையும் புதியதாக தாங்கள் கொண்டுவர வில்லை எனவும் 1940இல் திருவாங்கூர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி வழிபட்ட ஆதாரம் உள்ளதாகவும் கூறினார். 1990இல் கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பை ஒட்டியே இன்று இவ்விதி தீவிரமாக அமலாக்கப் படுகிறது என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ் உறுப்பினர் கே சுதாகரன் மத நம்பிக்கையிலும் பழக்கவழக்கங்களிலும் அரசு தலையிடுகிறது என்று அமைச்சருடன் எதிர்வாதம் செய்தார். அமைச்சர் நம்பிக்கை என்பது சபரிமலை ஐயப்பன் மீதானதாகும்;அது ஆணிற்கும் பெண்ணிற்கும் பொது என்று பதிலிறுத்தார். பழக்கவழக்கங்கள் காலத்திற்கேற்ப மாறியே வருகிறது; கோவில் பூசாரி முன்பெல்லாம் குளத்தில்தான் குளிப்பார், ஆனால் தற்போதைய தந்திரிகள் குழாய் தண்ணீரில்தான் குளிக்கிறார்கள் என்றும் அவர் பதிலளித்தார். சபரிமலை செல்லும் பக்தைகளை 'மாளிகாபுரம்' என்றழைப்பதிலிருந்தே அவர்கள் வழிபட தடையேதும் இருந்திருக்கவில்லை எனத் தெரிகிறதென்றார்.

பெண்ணிய சங்கங்களிலிருந்து அரசிற்கு ஏராளமான மனுக்கள் இதுபற்றி வந்திருப்பதாகக் கூறிய அமைச்சர் பெண்களுக்காக தனி பருவம் ஒதுக்கபடலாம் என்ற ஆலோசனையும் வந்திருப்பதாகக் கூறினார்.

The Hindu News Update Service

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...