.

Wednesday, July 25, 2007

தீவிரவாதிகள் பட்டியலில் ஏழு வயது சிறுவன்.

தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டையில் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தி வருகிறது. விமான நிலையங்களில், தீவிர கண்காணிப்பும் நடக்கிறது. தேடப்படும் அதி பயங்கர தீவிரவாதிகள் பட்டியல்களை தயாரித்து அதை விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் போர்ட் லாடர்லே விமான நிலையத்துக்கு கிறிஸ்டா மார்ட்டின் என்ற பெண் தனது 7 வயது குழந்தை மைக்கேல் மார்ட்டினை அழைத்துக்கொண்டு வந்தார். ஈரான் நாட்டு விமானத்தில் ஏறுவதற்காக வந்த அந்த தாய் மற்றும் குழந்தையின் பெயரை அதிகாரிகள் சோதனை போட்டனர். அப்போது அந்த குழந்தையின் பெயர் தீவிரவாதிகளின் பட்டியலிலும் இருந்தது.

இதனால் அந்த குழந்தைக்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. அது மட்டுமல்ல அந்த 7 வயது குழந்தையை தீவிரவாதியிடம் சோதனை செய்வது போல் சோதனை நடத்தி அதிகாரி களும், போலீசாரும் கெடுபிடி செய்தனர்.

என்ன தப்பு செய்தோம் என்று தெரியாமல் அந்த சிறுவன் திருதிருவென விழித்துக்கொண்டு இருந்தான். நீண்ட நேர சோதனைக்குப் பிறகே அந்த குழந்தைக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள்.

மாலைமலர்

2 comments:

Anonymous said...

Welcome to சற்றுமுன்...breaking news blog...Thank you.
-------கையில் சுத்தியல் இருந்தால் பார்ப்பதெல்லாம் ஆணிபோலத்தான் இருக்கும்.-----

kaiyil mavusu irunthaal?

Anonymous said...

//கையில் சுத்தியல் இருந்தால் பார்ப்பதெல்லாம் ஆணிபோலத்தான் இருக்கும்./

:-))!

-o❢o-

b r e a k i n g   n e w s...