.

Wednesday, July 25, 2007

புதிய குடியரசு தலைவராக பிரதிபா பாட்டீல் இன்று பிற்பகல் பதவி ஏற்றார்.

புதிய குடியரசு தலைவராக பிரதிபா பாட்டீல் இன்று பிற்பகல் பதவி ஏற்றார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்துவைத்தார். அப்துல் கலாமின் குடியரசு தலைவர் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி குடியரசு தலைவர் தேர்தல் கடந்த 19ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட பிரதிபா பாட்டீல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். நாட்டின் 13 வது குடியரசு தலைவராகவும், முதல் பெண் குடியரசு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீல், நாடாளுமன்ற மத்திய மண்டபத்தில் நடைபெற்ற வண்ணமிகு விழாவில் இன்று பிற்பகல் பதவி ஏற்றார்.

அவருக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்தார். பிரதிபா பட்டேல் பதவி ஏற்று உரையாற்றினார். இந்தநிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஷெகாவத், நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத்சாட்டர்ஜி, ராஜ்யசபா துணைத்தலைவர் ரகுமான்கான், மாநில கவர்னர்கள் மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி உட்பட மாநில முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முப்படை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்று முடிந்ததும். நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் மகிழ்ந்தனர். பின்னர் அணிவகுப்பு மரியாதையுடன் பிரதிபாபட்டேல் குடியரசு தலைவர் மாளிகைக்கு அழைத்துசெல்லப்பட்டார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...