கொலைசெய்யப்பட்ட பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் உல்மர் வழக்கு விசாரணையில் வெள்ளியன்று புதிய திருப்பம் ஏற்பட்டது. பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் ஜமைக்காவிலேயே தங்கியிருக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அணியின் மற்ற வீரர்கள் நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜமைக்கா தொலைக்காட்சியின் தகவலின்படி இரண்டு வீரர்கள் நீதிபதி முன்னிலையில் விசாரிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. ஆனால் அந்த வீரர்கள் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.
பாப் உல்மர் கொலை விசாரணையை மேற்கொண்டு வரும் காவல்துறை அதிகாரி மார்க் ஷீல்ட்ஸ், முன்னதாக சந்தேகத்துக்குரிய நபர்கள் என்று யாரையும் அடையாளப்படுத்தவில்லை.
உல்மர் கொலை செய்யப்பட்ட விதம் பற்றி ஷீல்ட்ஸ் தெரிவிக்கையில், அறையில் எதுவும் உடையாத நிலையில் கொலையாளியை உல்மர் அறிந்திருக்க வேண்டும் என்றார்.
உல்மரின் தோற்றதை வைத்துப் பார்க்கும்போது ஒருவருக்கு மேற்பட்டோர் இந்த கொலையைச் செய்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
நன்றி: MSN TAMIL
Saturday, March 24, 2007
சற்றுமுன்:உல்மர் கொலை : 2 பாக் வீரர்கள் தங்கியிருக்க உத்தரவு
Labels:
உலகம்,
கிரிக்கெட்,
விளையாட்டு
Posted by சிறில் அலெக்ஸ் at 6:39 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment