.

Tuesday, March 20, 2007

ஏமாற்றும் ஏர் டெக்கான் ( Air Deccan)

ஏர் டெக்கான் நிறுவனம் பயனிகளை எவ்வாறு ஏமாற்றுகிறது என்பது பற்றி CNN-IBN ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது, பயனிகளை தாமதமாக வந்ததாக கூறி விமானத்தில் பயனம் செய்ய அனுமதிக்காமல் ஏமாற்றுவதாக இந்த செய்தியில் குறிபிடப்பட்டுள்ளது.

முழு செய்திக்கு இங்கே செல்லுங்க..

அதன் வீடியோ இங்கே

10 comments:

சிறில் அலெக்ஸ் said...

என்ன அநியாயங்க.
:(

ரவிசங்கர் said...

ஏர் டெக்கான் ஒரு உருப்படாத service. முக்கிய நிகழ்வுக்கு சரியான நேரத்தில் செல்ல விரும்புபவர்கள் அதைத் தவிர்க்கவும். அதில் விமான நிலையத்தில் பொறுப்புள்ள முகவர்கள் பத்தாம் வகுப்பு படித்திருந்தால் கூட இன்னும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டிருப்பார்கள்.

4 மணி நேரத் தாமதத்துக்குப் பின் நாங்கள் விமானத்தில் ஏறி உட்கார்ந்தவுடன் விமானப் பணிப் பெண் வரத் தாமதம் என்று 10 நிமிடம் காக்க வைத்த அதிசய சேவை !!

இப்படிக்கு,

அண்மையில் பாதிக்கப்பட்ட பயணி

துளசி கோபால் said...

ஒருதடவைப் பட்டதில் இனி ஏர் டெக்கனே வேணாமுன்னு இதை black list செஞ்சுட்டேன்.
போதுமடா சாமி........

Anonymous said...

சென்ற வாரம் நான் தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பிடிக்க வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்துக்கு (சும்மா ஒரு சின்னக் கட்டிடம்) காலை 9 மணிக்கே சென்றாகி விட்டது. விமானம் வரும் வழியைக் காணோம். ஒரு ஈ காக்கையையும் காணும், இன்னும் சில பயணிகள் சேர அப்புறமாகச் சொன்னார்கள் இன்றைக்கு ஏர் டெக்கான் வராதே, இன்று செவ்வாய் அல்லவா என்று. எனக்குக் கோபம் தலைக்கேற அப்புறம் என்ன மசுத்துக்குடா டிக்கெட் வித்தீங்க என்ற ஏற ஒரே ரகளை. அப்புறம் அடித்துப் பிடித்து ஒரு டாக்ஸிக்கு 5000 கொடுத்து மதுரை வந்து பாரமவுண்டு என்ற ப்ளேன் பிடித்துச் சென்னை வந்து, அப்புறமா சிங்கப்பூர் போயி அப்புறமா சியோல் போயி அப்புறமா சான்பிரான்ஸிஸ்கோ போயி, ஒரே இண்டியானா ஜோன்ஸ் அட்வெஞ்சர்தான் போங்க. ஏர் டெக்கான் எல்லாம் ஆத்திர அவசரத்துக்கு உதவுற சமாச்சாரம் இல்லை. சும்மா ப்ளேனில் ஜாலியா பறந்து போய் பார்க்க விரும்புவரகள், முக்கிய வேலை வெட்டி எதுவும் இல்லாத ஆட்கள் போக வேண்டிய ஃப்ளைட். வந்தால் போகலாம் வராவிட்டால் திரும்பி வீட்டுக்குப் போய் குட்டித் தூக்கம் போடலாம்.

இந்த பாரமவுண்டு ஏர்லைன்ஸ் இன்னொரு ஜோக்கர்கள். இவர்கள் இந்திய கிரிடிட் கார்டு மட்டுமே வாங்குவார்களாம். என்னிடம் காசு இல்லை. கிரிடிட் கார்டுதான், நல்ல வேளை கூட வந்தவரிடம் கடன் வாங்கி ஒரு வழியாக சென்னை வந்து சேர்ந்தேன். இந்த பாரமவுண்டு ஏர்லைன்ஸ் பந்தாவாக 1800 நம்பர் எல்லாம் கொடுத்துள்ளார்கள் கூப்பிட்டால் அப்படி ஒரு நம்பர் இல்லை என்று வரும், அவர்கள் சென்னை நம்பர் எப்பொழுதும் எடுக்காது, மதுரை நம்பரில் மட்டும் யாரோ எடுப்பார்கள். மொஃபசலில் டப்பா பஸ் ஓட்டின ஆட்கள் எல்லாம் ஏரோப்ளேன் விட ஆரம்பித்தால் இப்படித்தான் இருக்கும்.

அன்புடன்
ச.திருமலை

Anonymous said...

பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அடுத்த விமானத்திற்கு செல்ல புக் செய்யச்சொல்வார்கள். எனவே அவசர தேவைகளுக்கு இவர்களின் சேவையைத்தவிர்ப்பது நல்லது.

வடுவூர் குமார் said...

அட பாவிகளா!!
இப்படியும் சம்பாதிக்கனுமா?
அதுக்கு விமான நிலையத்துக்கு வெளியில் துண்டுவிரித்தால் அதைவிட அதிகமாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

தென்றல் said...

ஏர் டெக்கான் ஆரம்பித்த காலத்தில இருந்து இதே பிரச்சனைதான்.

இன்னும் மாறலயா?

மணிகண்டன் said...

ஒரே அழிச்சாட்டியமா இருக்கே. இதுக்கெல்லாம் நுகர்வோர் நீதிமன்றத்துக்கு போக முடியாதா?

சிவபாலன் said...

நான் இந்தியா போன போது டெல்லி, சென்னை, கோவை எல்லா இடத்திற்கு ஏர் டெக்கான் தான் பயன்படுத்தினேன்.. இது மாதிரி எதும் நடக்காமல் தப்பிவிட்டேன்..

ம்ம்ம்... எப்பதான் இந்த ஏர் டெக்கான் திருந்த போகுது..

சிவபாலன் said...

கருத்தையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி

-o❢o-

b r e a k i n g   n e w s...