.

Tuesday, March 20, 2007

60 ஆண்டுகளாக மின்சாரம் காணாத தமிழக கிராமம்

தலைவர் அப்துல் கலாமின் சொந்த கிராமம் அருகே உள்ள குட்டிக் கிராமம் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சாரம் இன்றி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் அருகே உள்ளது முந்தல் முனை கிராமம். குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சொந்த கிராமத்துக்கு அருகே இது உள்ளது.

இங்கு 80 குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த 60 ஆண்டுகளாக இங்கு மின்சார வசதி கிடையாது. மேலும், சாலை, மின்சாரம், குடிநீர் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. அதற்காக மனித உரிமை ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கோட்டாட்சியர் உள்பட வருவாய் அதிகாரிகள் முந்தல் முனை கிராமத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, அந்த மக்கள் வசிக்கும் பகுதி ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடமாக இருந்தது. இந்த இடத்தில் மக்கள் ஆக்கிரமித்து தாங்களாகவே வீடு கட்டிக்கொண்டனர். இதனால், இங்கு அடிப்படை வசதிகள் செய்து தரமுடியவில்லை.

இதுகுறித்து பாம்பன் ஊராட்சி தலைவர் ஹனிபா கூறுகையில், முந்தல் முனையில் வசிப்பவர்கள் இடத்திற்கான பிமெமோ ரசீது, வீட்டுவரி ரசீது போன்ற எதுவும் இல்லாமல் குடும்ப அட்டை மட்டும் வைத்துள்ளார்கள். இவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வதில் பிரச்னை இருக்கிறது. இடப்பிரச்னை தொடர்பாக தேவஸ்தானத்திடம் கோட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் பேச உள்ளனர் என்றார்.


தினகரன்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...