.

Tuesday, March 20, 2007

இந்தியாவில் எந்த நேரத்திலும் பறவைக்காய்ச்சல் தாக்கலாம்

இந்தியாவில் பறவைக் காய்ச்சல் நோய் எந்த நேரத்திலும் பரவலாம் என மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் காந்திலால் புரியா, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மரில் கடந்த வாரம் பறவைக்காய்ச்சல் நோய் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக பறவைக்காய்ச்சல் நோய் ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டுக்கு இடம் பெயரும் பறவைக் கூட்டங்களால் பரவுகிறது. தற்போது அண்டை நாடுகளில் பரவியிருப்பதால் இந்தியாவிலும் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அமைச்சர் கூறினார். இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க கால்நடை பராமரிப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டதாக அமைச்சர் அறிவித்தார்.

- மாலை முரசு

1 comment:

Anonymous said...

அன்பான குழுவினற்க்கு....
இது போன்ற வலைக்குழுவில் சேர்ந்து பணியாற்ற என்னை போன்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தால் இளம் கட்டுரையாளர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும் இது பற்றி ஒரு திட்டம் இருந்தால் என்னையும் இணைத்துக்கொள்ள விரும்புகிறேன்.தங்களின் மேலான பதிலுக்காக காத்திருக்கிறேன்.
நன்றி....
அன்புடன் ஹசன்...
எனது மின்னஞ்சல், islamicpress@gmail.com

-o❢o-

b r e a k i n g   n e w s...