.

Monday, May 14, 2007

மனதறிய துரோகம் நினைத்ததில்லை - தயாநிதி

தயாநிதி மாறன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நான், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கோ, தலைவர் கலைஞர் அவர்களுக்கோ என் மனதறிய எந்த துரோகமும் நினைத்தது இல்லை. இனி உயிர் உள்ளவரை நினைக்கவும் மாட்டேன். என் தாத்தாவும் தந்தையும் என்னை அப்படி வளர்க்கவும் இல்லை. இந்த நிலையில், என்னை பதவி விலக்குவதும் அடிப்படை உறுப்பினர் பதவியை பறிப்பதும் தலைவருக்கும் அவரது குடும்பத்திற்கும் மகிழ்ச்சி தருவதாக இருந்தால், அதை ஏற்கவும் தயாராக இருக்கின்றேன். ஏனென்றால், நான் தலைவர் கலைஞரின் வளர்ப்பு. அவரால் ஆளாக்கப்பட்டவன். இந்த நேரத்தில் இதைத் தவிர வேறு எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.
3 ஆண்டு காலம் இந்திய நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நேர்மையாகவும் என்னால் முடிந்த அளவு சிறப்பாகவும் பணியாற்றி, பலரின் பாராட்டைப் பெற வாய்ப்பளித்த தலைவருக்கும் கழகத்துக்கும் கழகத் தோழர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

5 comments:

சிவபாலன் said...

நன்றி: தினகரன்

சிவபாலன் said...

ஏதோ பிளாக்கர் பிராபளம். அதனால் பதிவு சரியா வேலை செய்யவில்லை

கோவி.கண்ணன் [GK] said...

//சிவபாலன் said...
ஏதோ பிளாக்கர் பிராபளம். அதனால் பதிவு சரியா வேலை செய்யவில்லை
//
திமுகவின் சதி ! ஆட்சியை அகற்றனும் !
:)))))

அருண்மொழி said...

//திமுகவின் சதி ! ஆட்சியை அகற்றனும் !//

சற்றுமுன் மிகப் பிரபலம் அடைந்து வருவதால் சதிகாரர்கள் இந்த வலைதளத்தை block செய்து விட்டார்கள்.

VSK said...

கண்ணியமான அறிக்கை!

-o❢o-

b r e a k i n g   n e w s...