சன் டிவி-தினகரன் குழுமத்தின் மாலை தினசரியான தமிழ் முரசு மீது சட்டசபையில் உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி-மாறன் குடும்ப மோதல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
சன் டிவி-தினகரன் குழுமம் நடத்தி வரும் மாலை நாளிதழ் தமிழ் முரசு. மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என சில தினங்களுக்கு முன் சட்டசபையில் கருணாநிதி அறிவித்தார்.
அந்தச் செய்தியை தமிழ் முரசு திரித்து வெளியிட்டதாக இன்று சட்டசபையில் உரிமை மீறல் தீர்மானம் ெகாண்டு வந்தார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானசேகரன். அவர் பேசுகையில்,
முதல்வர் சொன்னதை தமிழ் முரசு பத்திரிக்கை திரித்து வெளியிட்டது. அதில் அழகிரியையும் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டது. இதனால் அதன் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையடுத்துப் பேசிய சபாநாயகர் ஆவுடையப்பன், ஞானசேகரன் ெசால்லும் குற்றச்சாட்டுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது. எனவே அதை உரிமைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப உத்தரவிடுகிறேன் என்றார்.
நன்றி:- தட்ஸ் தமிழ்
Monday, May 14, 2007
சற்றுமுன்: தினகரனின் 'தமிழ் முரசு' மீது உரிமை மீறல் நடவடிக்கை
Posted by கவிதா | Kavitha at 5:15 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
ஞானசேகரன் தனது பெயர் எப்படியும் செய்திதாள்களில் தினமும் வந்தால் போதும் என நினைக்கும் ஒரு சராசரி ஆசாமி.எப்படியும் சோனியாவின் கவனத்தை ஈர்த்துவிட வேண்டும் என்பதுதான் அவருடைய கனவு.
சுத்த கிறுக்குப் பயல்
Post a Comment