.

Monday, March 19, 2007

இப்போது சூரிய கிரகண நேரம்

இன்று சூரிய கிரகணம்

சென்னை : வானில் நிகழும் அற்புத நிகழ்வுகளில் ஒன்றான சூரிய கிரகணம் இன்று காலை நிகழ்கிறது.
சூரிய கிரகணம் இன்று காலை 6:08 மணிமுதல் காலை 9:58 மணிவரை நிகழ்கிறது. இந்தியாவில் டில்லி, பெங்களூரு, கோல்கட்டா, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் இருந்து சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். சென்னையில் காலை 6:45 மணிமுதல் காலை 7:23 மணி வரை பார்க்கலாம். சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்ப்பது நல்லதல்ல. பிரத்யேக கண்ணாடிகள் மூலம் பார்க்க வேண்டும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்க வளாகத்தில் சூரிய கிரகணத்தை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 4ம் தேதி சந்திர கிரகணம் நடந்து முடிந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக சூரிய கிரகணமும் நிகழ்வது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. சூரிய கிரகணத்தையொட்டி, இன்று பல்வேறு கோவில்களில் கிரகணம் முடியும் வரை நடை சாத்தப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் காலை 6 மணி முதல் 8 மணிவரை நடை சாத்தப்படுகிறது. இதே போல் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமான கோவில்களிலும், தமிழக கோவில்களிலும் சூரிய கிரகணம் நடக்கும்போது நடை சாத்தப்பட்டு பின்னர் பரிகார பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

source=தினமலர்

குறிப்பு: இந்திய நேரப்படி இப்போது சூரிய கிரகண நேரம்...!

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...