.

Monday, March 12, 2007

இன்சாட்4 பி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது

இன்சாட்4 பி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

பெங்களூரூ: இன்சாட்4 பி செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக இன்று அதிகாலை ( 12 ம் தேதி 3 .35 மணிக்கு ) விண்ணில் செலுத்தப்பட்டது. வீடுகளுக்கான நேரடி ஒளிபரப்பு உட்பட தொலை தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் இன்சாட் வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இன்சாட்4 ஏ என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய நிலையில், இன்சாட்4 பி என்ற புதிய செயற்கைக்கோளை நேற்று ( 11 ம் தேதி) விண்ணில் செலுத்த, இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ திட்டமிட்டது. தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானா விண்வெளி தளத்தில் இருந்து செயற்கைக்கோளை ஏற்றிச் செல்லும் ஏரியன்5 ராக்கெட் தயாராக இருந்தது. ஆனால், புறப்படுவதற்கு ஏழு நிமிடங்களுக்கு முன் கட்டுப்பாட்டு தளத்தில் சிறிய கோளாறு ஏற்பட்டதால், ஏரியன்5 ராக்கெட்டின் பயணம் ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டது. எனவே, இன்சாட்4 பி செயற்கைக்கோள் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3. 35 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இன்சாட்4 பி செயற்கைக் கோளுடன் பிரிட்டனின் உளவு செயற்கைக்கோள் ஒன்றும் ஏரியன்5 ராக்கெட் மூலம் செலுத்தப்படுகிறது.

source தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...