.

Monday, March 12, 2007

ஜிம்பாவேவின் பிரதான எதிர்க்கட்சியின் தலைவர் கைது

ஜிம்பாவேவின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக மாறுதலுக்கான அமைப்பு என்ற கட்சியின் தலைவரும், ஐந்து மூத்த உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி கூறியுள்ளது. தலைநகர் ஹராரேயில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் பங்கேற்க்க அவர்கள் முயற்சித்ததாக கட்சி கூறுகின்றது..

இந்த பேரணியில் பங்கேற்ற சுமார் ஐம்பதாயிரம் பேர் மீது காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசியதோடு, தண்ணீரையும் பீய்ச்சியடித்துள்ளனர். அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையை இந்த கூட்டம் மீறியதாக அரசாங்கம் கூறுகின்றது.

இதற்கிடையே செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் 2008 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தான் போட்டியிட விரும்புவதை அதிபர் ராபர்ட் முகாபே வெளிப்படுத்தியுள்ளார்.

BBCTamil.com | BBC NEWS | Africa | Zimbabwe opposition leader held

2 comments:

Boston Bala said...

ஜிம்பாப்வேயில் எதிர்கட்சித் தலைவர் மீது தாக்குதல்

ஜிம்பாப்வே எதிர்கட்சித் தலைவர் மோர்கன் சங்கிராயும் இதர செயற்பாட்டாளர்களும் வெட்டுக்கள், காயங்களுடன் தலைநகர் ஹராரே நீதிமன்றத்தில் தோன்றியதன் பின், மருத்துவமனைக்கு சோதனைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.

ஆர்பாட்டப் பேரணிகளுக்குத் தடையிருந்த சமயத்தில் கடந்த ஞாயிறு நடத்திய பேரணியைத் தொடர்ந்து இவர்கள் கடந்த இரண்டு இரவுகளாக போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

நீதி மன்றத்துக்கு கூடாரமில்லாத ட்ரக் வண்டியில் அழைத்து வரப்பட்ட மோர்கன் சங்கிராயும் இதர எதிரணி உறுப்பினர்களும் காயங்கள், கட்டுகளுடன் நொண்டியபடியே நீதி மன்றத்துக்கு வந்தனர்.

மோர்கன் சங்கிராய் அவர்களுக்கு உடனடியாக மருத்துமனையில் சிகிச்சை தேவை என்று வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் லூயி ஆர்பர் அவர்கள் திகைக்க வைக்கும் போலீஸ் அராஜகம் குறித்து மிகவும் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Boston Bala said...

ஜிம்பாப்வே எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்

ஜிம்பாப்வே நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினரான நெல்சன் சமிசா, ஐரோப்பாவிற்கான விமானம் ஒன்றில் ஏறுவதற்கு முன்பாக அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

ஹராரே விமான நிலையத்திற்கு சென்ற நெல்சன் சமிசா மீது அடையாளம் தெரியாத பலர் நடத்திய தாக்குதலில் அவர் சுயநினைவை இழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவருடைய மண்டை ஒட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ப்ரசல்ஸில் நடைபெறும் மாநாடு ஒன்றில் நெல்சன் சமிசா பங்கேற்பதாக இருந்தது.

முன்னதாக சனிக்கிழமையன்று ஹராரே விமான நிலையத்திற்கு மருத்துவ ஊர்தியில் சென்ற இரண்டு காயமடைந்த எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

மருத்துவ சிகிச்சைக்காக இவர்கள் தென்னாப்பரிக்கா செல்லவிருந்தனர்.

கடந்த வாரம் எதிர்கட்சியினர் நடத்திய பேரணியில் காவல்துறையினர் அடக்குமுறையை கையாண்டதை தொடர்ந்து, ஏராளமான அதிருப்தியாளர்கள் காயங்களுடன் காணப்படுகின்றனர்.

-o❢o-

b r e a k i n g   n e w s...