.

Monday, March 12, 2007

உலக கோப்பை கிரிக்கெட் வண்ணமயமான துவக்கவிழா!

ஜமைக்கா:ஜமைக்காவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் துவக்க விழா கோலாகலமாக நடந்தது.ஒன்பதாவது உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசில் நடக்க உள்ளது. இதில் இந்தியா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன. வரும் ஏப். 28ம் தேதி பைனல் நடக்கிறது. இப்போட்டிக்கான துவக்க விழா இன்று அதிகாலை ஜமைக்காவில் உள்ள டிரிலாவ்னி அரங்கில் வண்ணமயமாக நடந்தது. போட்டிகளை ஜாம்பவான் கேரி சோபர்ஸ் துவக்கி வைத்தார். வெஸ்ட் இண்டீஸ் சக்தி என்ற பெயரில் சுமார் 3 மணி நேரம் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் 2 ஆயிரம் கலைஞர்கள் கலந்து கொண்டு ஆடிப் பாடி வெஸ்ட் இண்டீஸ் கலாசாரத்தை பிரதிபலித்தனர். வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. ரூப்பி, ஷாகி, பயான் லியான்ஸ் ஆகியோர் இணைந்து அன்புக்கும் ஒற்றுமைக்கும் கிரிக்கெட் என்ற தொடரின் அதிகாரப்பூர்வ பாடலை பாடினர். அரங்கில் 16 அணி வீரர்களும் அணிவகுத்து வந்த போது கரகோஷம் விண்ணை பிழந்தது.இந்திய வீரர்களை கேப்டன் ராகுல் டிராவிட் தலைமைதாங்கி அழைத்து வந்தார் .

source தினமலர்

2 comments:

இலவசக்கொத்தனார் said...

படம் எதுவும் கிடைக்கலையா? தேடிப் பார்த்துப் போடுங்களேன்.

கதிர் said...

கலை நிகழ்ச்சி வீடியோ இருந்தா போடுங்க மணிகண்டன்.

எங்கள போல ஆளுங்க பாக்க வசதியா இருக்கும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...