தமிழத்தை கடந்த ஒரு மாதமாக தாக்கி எடுத்து வந்த அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) இன்றுடன் முடிகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அடித்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. ஆங்காங்கே நல்ல மழையும் பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் வெயில் வெளுத்துக் கட்டியது. குறிப்பாக சென்னை, அரக்கோணம், வேலூர் ஆகிய நகரங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் பலமாக இருந்தது. இந்த ஊர்களில் அதிகபட்சமாக 110 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் அடித்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் படிப்படியாக குறையத் தொடங்கியது. இன்றுடன் கத்திரி வெயில் முடிவடைகிறது. இதையடுத்து வெயில் இனி அதிகம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கோடை மழையும் ஆங்காங்கே பரவலாக பெய்து வருவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
Tuesday, May 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment