சென்னை மாணவிகள் சாதனை.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் சென்னை மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் சென்னை மண்டலத்தில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கோவா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, அந்தமான்-நிகோபர் தீவுகள், டாமன்-டையூ, லட்சத்தீவுகள் ஆகியவை உள்ளன. சென்னை மண்டலத்தில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. இதில் சென்னை மாணவ, மாணவிகள் இரண்டாவது, மூன்றாவது இடங்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.சென்னை கோபாலபுரம் டிஏவி பெண்கள் முதுநிலை மேனிலைப்பள்ளி மாணவி ச.திவ்யா 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று மண்டலத்தில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். இதே பள்ளியில் படிக்கும் ச.ராஜேஸ்வரி 489 மதிப்பெண்கள் பெற்று நான்காவது இடம் பிடித்தார்.சென்னை முகப்பேர் டிஏவி பெண்கள் முதுநிலை மேனிலைப்பள்ளி மாணவி பா.சவுமியா 491 மதிப்பெண்கள் பெற்று மண்டலத்தில் மூன்றாம் இடம் பெற்றார். இதேபோல், சென்னை கோபாலபுரம் டிஏவி ஆண்கள் முதுநிலை மேனிலைப்பள்ளி மாணவர் நவனீத் நாயர் 491 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.
தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை சற்றுமுன் மனதார பாராட்டுகிறது. சிறந்த துறைகளை தேர்ந்தெடுத்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அதேசமயம், தேர்ச்சிபெறாமல் போன மற்ற மாணவ/மாணவிகள் தொடர்ந்து தங்கள் கல்வி கற்கவும் பெற்றோர்கள் தொடர்ந்து அவர்களுக்கு ஊக்கத்தை கொடுத்து கல்வி புகட்ட சற்றுமுன் கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment