.

Tuesday, May 29, 2007

திமுகவில் சேரும் ராஜ் டிவி சகோதரர்கள்

ராஜ் டிவி நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன் திமுகவில் சேரத் திட்டமிட்டுள்ளார். முன்பு ராஜ் டிவிக்கு தயாநிதியால் நெருக்கடி வந்தபோது பாஜகவில் சேர்ந்தார் ராஜேந்திரன். ஆனால் அதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் திமுக தரப்பிலிருந்து தங்கள் மீது ஆதரவுப் பார்வை படத் தொடங்கியுள்ளதால் திமுகவில் சேர முடிவு செய்துள்ளார் ராஜேந்திரன். ஜூன் 1ம் தேதி அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் ராஜேந்திரனும், அவரது சகோதரர்கள் ராஜரத்தினம், ரவீந்திரன், ரகுநாதன் ஆகியோரும் திமுகவில் இணையவுள்ளனர்.

இது சந்தர்ப்பவாத செயலாக கூறப்படுகிறதே என்று ராஜேந்திரனிடம் கேட்டபோது,

நிச்சயம் இல்லை. நான் திமுக காரனாகத்தான் பிறந்தேன், திமுகக்காரனாகத்தான் இறப்பேன்.

எனது தந்தை மாணிக்கம் பிள்ளை திமுககாரர். எனது மாமனாரும் திமுககாரர். முன்னாள் அமைச்சர் மாதவன் எனது உறவினர். எனது குடும்பமே திமுக குடும்பம்தான். எனவே நானும், எனது சகோதரர்களும் திமுகவில் சேருவது சந்தர்ப்பவாத செயல் அல்ல என்றார் ராஜேந்திரன்.

8 comments:

இலவசக்கொத்தனார் said...

திமுகவோ இல்லையோ, சரியன அரசியல்வியாதிதான். சந்தேகமே இல்லை.

உண்மைத்தமிழன் said...

அவர்களுக்கும் வேறு வழியில்லை.. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள முடிவெடுத்துவிட்டார்கள். இது எந்த அளவிற்குப் பலனளிக்கும் என்பது 'மாறன்கள்' கையில்தான் உள்ளது.

Boston Bala said...

---நான் திமுக காரனாகத்தான் பிறந்தேன், திமுகக்காரனாகத்தான் இறப்பேன்.---

இதே மேற்கோளை சமீபத்தில் சொல்லிய மற்றொரு பிரபலம் யார்!?

Subramanian said...

வெளியேறியவனும் இதத்தான் சொல்றான். உள்ளே வர்ரவனும் இதத்தான் சொல்றான்.என்னமோ போங்க,நா விளக்குமாறு விக்கப் போகணும்.ஆள விடுங்க.

Anonymous said...

//இதே மேற்கோளை சமீபத்தில் சொல்லிய மற்றொரு பிரபலம் யார்!?//

வேறு யார், சன் குழும சகோதரர்களில் இளையவர் தான்.

---நான் திமுக காரனாகத்தான் பிறந்தேன், திமுகக்காரனாகத்தான் இறப்பேன்.---

அப்படின்னா இடையில் வந்து "சேர" வேண்டிய அவசியம் என்ன??

தென்றல் said...

/---நான் திமுக காரனாகத்தான் பிறந்தேன், திமுகக்காரனாகத்தான் இறப்பேன்.---

இதே மேற்கோளை சமீபத்தில் சொல்லிய மற்றொரு பிரபலம் யார்!?
/

நேற்று: சரத்குமார்
இன்று: தயாநிதி
நாளை: ?

Unknown said...

நேற்று: சரத்குமார்
இன்று: தயாநிதி
நாளை: அழகிரி

அபி அப்பா said...

// Boston Bala said...
---நான் திமுக காரனாகத்தான் பிறந்தேன், திமுகக்காரனாகத்தான் இறப்பேன்.---

இதே மேற்கோளை சமீபத்தில் சொல்லிய மற்றொரு பிரபலம் யார்!? //

கட்சியை விட்டு விலகும் எல்லாருமே இதை தான் சொல்லுவாங்க! இப்படி ஒரு வார்த்தை வந்துடுச்சுன்னாவே விக்கெட் விழ போகுதுன்னு அர்த்தம்.

ஆனா பாருங்க இந்த ராஜேந்திரன் இன்னிக்கு சேரும் போதே சொல்றார்ன்னா என்ன அர்த்தம்? அப்ப மாறன் பிரதர்ஸ் சமாதானம் ஆகும் முயற்ச்சி சூப்பரா நடக்குது போல:-))

-o❢o-

b r e a k i n g   n e w s...