.

Thursday, August 16, 2007

குண்டு பல்புக்கு கல்தா! - அரியானா மக்கள் அசத்தல் - மாதம் ரூ.9 கோடி மிச்சம்

சண்டிகர், ஆக. 16-

நாட்டில் குண்டு பல்பு ஒழிக்கப்பட்ட முதல் மாவட்டம் அரியானாவில் உருவாகியுள்ளது. இதன்மூலம் அரியானா மின்துறைக்கு மாதம் ரூ.9 கோடி மிச்சமாகியிருக்கிறது.
குண்டு பல்பு எரியவிடுவதால், அதிக அளவு மின்சாரம் செலவாகிறது. அதிக வெப்பத்தையும் இது வெளியிடுவதால், சுற்றுப்புறம் வெப்பமாகிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்று கூறி, உலக அளவில் குண்டு பல்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறைந்த மின்சக்தியிலேயே அதிக வெளிச்சம் தரும் ப்ளூரசன்ட் விளக்குகளுக்கு மக்கள் மாற வேண்டும் என்றும் பிரசாரம் நடந்து வருகிறது.

மேலும் செய்திக்கு "தமிழ் முரசு" செல்லவும்.

10 comments:

சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப நல்ல செய்தி. நாமே முன்வந்து இப்டி செய்தால் நல்லாயிருக்கும்.

வவ்வால் said...

சிவபாலன் ,

விரைவான இம்மாற்றம் அதிசயதக்கது! விரைந்து செய்தியை அளித்தற்கும் நன்றி!(இப்போ தான் இதை பதிவா போடலாமானு யோசித்து கொண்டு இருந்தேன்)

சிவபாலன் said...

நிச்சயம் நல்ல முயற்சி! இந்த தகவல் மற்றவர்களுக்கும் சென்றடைந்து, குண்டு பல்பை ஒளிக்க வேண்டும்!

Anonymous said...

But fluorescent bulbs contain mercury. It's bad for health.

சிவபாலன் said...

இங்கே படிக்க வருபவர்களுக்கு கிழே உள்ள சுட்டி ஓரளவு பயனளிக்கும் என்பதால் என் இடுக்கையின் சுட்டியை இங்கே கொடுக்கிறேன்.

நன்றி!

http://sivabalanblog.blogspot.com/2007/08/greenhouse-effect.html

Anonymous said...

பாதரசம் கெடுதல் தான். அதற்கு வேண்டி இருட்டில் இருக்க முடியாது. சரியா?

குண்டு பல்பை விட இது சிறந்தது. இரு கோடுகள் தத்துவம்தான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அதை நாம் மண்ணில் எரியும் போது கெடுதல் இல்லையா...ரீசைக்கிள் முறை அதற்கு இல்லை என்று சிலர் சொல்கிறார்களே அப்படியா..

Anonymous said...

// But fluorescent bulbs contain mercury. It's bad for health.//
ஆமாம். ஆமாம். இந்தியாவில், முறையாக


அப்புறப்படுத்தவா முடியும்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஏதேதோ இலவசம் கொடுக்கிறாங்களே!
அந்த புதுவித பல்பை இலவசமாகக் கொடுத்தல் என்ன?

Anonymous said...

flourescent bulbகள் சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
இது சுற்றுப்புறத்தை பாழாக்கும். நவீன தொழில் நுட்பம் இதை
தாண்டி இப்போது LED பல்ப் வந்துவிட்டது.

-o❢o-

b r e a k i n g   n e w s...