.

Thursday, August 16, 2007

மானாவாரி நிலம் மேம்படுத்த திட்டம்

ஈரோடு, ஆக. 16-
ஈரோடு மாவட்டத்தில் மானாவாரி நிலங்களை மேம்படுத்த நவப்ரா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் வெள்ளக்கோவில் வட்டாரத்தில் 2002 முதல் 2007ம் ஆண்டு வரை பச்சாம்பாளையம் கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு திருத்தியமைக்கப்பட்ட நவப்ரா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி பச்சாம்பாளையம் கிராமத்தில் 5 ஹெக்டேர் நிலப்பரப்பு கொண்ட 7 நீர்வடிப்பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நீர்வடிப்பகுதிகளிலும் பயனாளி குழுக்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் ஒவ்வொரு நீர்வடிப்பகுதிகளுக்கும் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியாக ரூ.84 லட்சம் பெறப்பட்டு இதுவரை ரூ.52 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட நவப்ரா திட்டத்தில் மழை நீரை வீணாக்காமல் தேக்கி வைத்து அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகப்படுத்தி மானாவாரியாக உள்ள நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவதாகும். பண்ணை குட்டைகள் மற்றும் கசிவுநீர் குட்டைகள் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதால் திறந்தவெளி கிணறுகள் மற்றும் குழாய் கிணறுகளின் நீர்மட்டம் அதிகரிக்கப்படுகிறது.

இத்தகவலை காங்கயம் வேளாண்மை உதவி இயக்குநர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

நன்றி "தமிழ் முரசு".

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...