பரதமுனி ஆசிய கலாசார அறக்கட்டளை சார்பில் பரத முனிவருக்குக் கோயில் கட்டுவதற்கு ரூ.27 லட்சத்தை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழங்கினார். பரதமுனி ஆசிய கலாசார அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பத்மா சுப்ரமணியத்திடம் இதற்கான காசோலையை புதன்கிழமை அவர் வழங்கினார். இது குறித்து அதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 2003-ம் ஆண்டு நிருத்யோதயாவின் 'வைர விழா'வை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அப்போது பத்மா சுப்ரமணியம் பரத முனிவருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தார்.
இந்தியாவில் பரதக் கலையைத் தோற்றுவித்த பரத முனிவருக்கு எங்குமே கோயில் இல்லை என்றும் முதல்முறையாக தமிழ்நாட்டில் கோயில் கட்டுவதற்கு நிலம் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார். அதன்படி, 2006-ம் ஆண்டு ஜனவரியில் கிழக்குக் கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அருகே உள்ள பட்டிபுலம் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை பரதமுனி ஆசிய கலாசார அறக்கட்டளைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அந்த இடத்தில் கோயில் கட்டுவதற்காக ரூ.27 லட்சத்தை தனிப்பட்ட முறையில் நன்கொடையாக பத்மா சுப்ரமணியத்திடம் ஜெயலலிதா வழங்கினார்.
தினமணி
DNA - India - Jayalalitha donates Re 27 lakh for building temple - Daily News & Analysis
Thursday, July 5, 2007
பரத முனிவருக்கு கோயில் கட்ட ரூ. 27 லட்சம்: ஜெயலலிதா வழங்கினார்
Labels:
கலை-இலக்கியம்,
சுற்றுலா,
தமிழ்நாடு
Posted by Boston Bala at 9:07 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment