இந்தியாவில் மட்டும் 650 தியேட்டர்களில் திரையிடப்பட்ட 'சிவாஜி' அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு மட்டுமில்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இப்படம் வசூல் சாதனை செய்துள்ளது. 'சிவாஜி' படம் மகராஷ்டிராவில் 18 தியேட்டர்களில் நேரடி தமிழ்ப்படமாகவே திரையிடப்பட்டது.
தற்போது இந்தியில் 'ஜூம் பராபர் ஜூம்' என்ற படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலும் நேரடி தமிழ்ப்படமாக திரையிடப்பட்ட சிவாஜிக்கு இப்போதும் இருக்கும் வரவேற்பை பார்த்து வினியோகஸ்தர்களே வியப்படைந்துள்ளனர்.
மேலும் பல மாநிலங்களில் சிவாஜியின் வசூல் வேட்டை தொடர்வதால் புதிய படங்களை திரையிட வினியோகஸ்தர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இப்படம் ஆந்திராவில் மட்டும் ரூ.18 கோடி வசூல் செய்துள்ளது.
இந்தியாவில் மட்டுல்லாது வெளிநாடுகளிலும் 'சிவாஜி' படம் வசூலை குவித்துள்ளது. அமெரிக்காவில் ரூ.4.5 கோடி, இங்கிலாந்தில் ரூ.2.75 கோடி, மலேசியாவில் ரூ.7.8 கோடி என வசூலை அள்ளியது 'சிவாஜி' படம். சிங்கப்பூரில் எந்தவொரு தமிழ்ப்படமும் இதுவரை காணாத வசூலை கண்டுள்ளது எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகமெங்கும் திரையிடப்பட்ட 'சிவாஜி' படம் 3 வாரங்களில் மட்டும் ரூ.95 கோடியை வசூலித்துள்ளது என கூறப்படுகிறது.
மாலைமலர்
Distributors confident film will break even before 50-days
Thursday, July 5, 2007
உலகமெங்கும் வசூல் மழையில் சிவாஜி: ரூ.100 கோடியை நெருங்குகிறது
Posted by Boston Bala at 11:25 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
4 comments:
//உலகமெங்கும் திரையிடப்பட்ட 'சிவாஜி' படம் 3 வாரங்களில் மட்டும் ரூ.95 கோடியை வசூலித்துள்ளது என கூறப்படுகிறது.//
இந்த 95 கோடியில் எனது பணமான 25 யூரோவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒரு அம்சம்.:)
---அமெரிக்காவில் ரூ.4.5 கோடி---
என்னுடைய வரவு பற்று கணக்கில் ரூ. 2,543.94 வைத்துக் கொள்க :)
//என்னுடைய வரவு பற்று கணக்கில் ரூ. 2,543.94 வைத்துக் கொள்க :)//
என்னுடைய சேமிப்புக் கணக்கில் ரூ. 2,543.94 வைத்துக் கொள்க. இன்னும் படம் பாக்கலை!
பல்லேலக்கா பாட்டைத் தலைவருக்காக பாக்கணும்னு இருந்தேன். ஆனா இணையத்துலயும் தொலைக்காட்சிலயும் அதைப் பாத்து நொந்துட்டேன். ரஜினி அறிமுகப் பாட்டா அமர்களப்படுத்திருப்பாங்கன்னு பாத்தா ஏமாத்தமாயிடுச்சு. ஒருவன் ஒருவன் முதலாளிக்கு ஈடாக இன்னொரு அறிமுகப்பாடல் அறிமுகப்படுத்தப் படவில்லை! :-)
பாலுவின் பல்லேலக்காவை வீணாக்கிய ஷங்கருக்குக் கண்டனங்கள்.
என்னுடைய 100 ரூபாயும் உண்டு.. தண்டம்..
Post a Comment