.

Thursday, July 5, 2007

துணை குடியரசுத்தலைவர் தேர்தல்: ஆகஸ்ட் 10

துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான அட்டவணையை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

வேட்பு மனு தாக்கல் - ஜூலை 9.
மனுதாக்கலுக்கு கடைசி நாள் - ஜூலை 23.
வேட்பு மனு பரிசீலனை - ஜூலை 24.
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் - ஜூலை 26.
தேர்தல் நாள் - ஆகஸ்ட் 10.

போட்டி இருந்தால் ஆகஸ்ட் 10ம் தேதி மாலையே ஓட்டுக்கள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்களவை உறுப்பினர்கள் 543 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 233 பேரும் துணை குடியரசுத் தலைவர் தேரத்லில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.

இவர்கள் தவிர மாநிலங்களவையைச் சேர்ந்த 12 நியமன உறுப்பினர்கள் மற்றும் மக்களவையைச் சேர்ந்த 2 நியமன உறுப்பினர்களும் தேர்தலில் வாக்களிக்க முடியும். மொத்தம் 790 எம்.பிக்கள் இத்தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.

துணை குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியாக, மாநிலங்களவை செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷெகாவத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் 18ம் தேதி முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ் தமிழ்

-o❢o-

b r e a k i n g   n e w s...