.

Thursday, July 5, 2007

இஸ்லாமாபாத்தில் உள்ள செம்மசூதியின் தலைமை குரு கைது

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாதிலுள்ள, தீவிரவாதக் கருத்துக்களைக் கொண்ட செம்மசூதியின் தலைமை மதகுரு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த மசூதியிலுள்ள தீவிரவாத கொள்கைகளையுடைய மாணவர்களுக்கும் பாகிஸ்தானின் அரச படையினருக்கும் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. செம்மசூதியைச் சுற்றி பாதுகாப்பு படைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

இஸ்லாமாபாத் போலீசின் துணை ஆணையாளர், அந்த மசூதியின் தலைமை மதகுரு மௌலானா அப்துல் அஜீஸ், இஸ்லாமியப் பெண்கள் அணியும் உடையான பர்க்காவை அணிந்து தப்பிக்க முயன்றதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தனது அடையாளத்தை அவர் மறைக்க முயன்றதாகவும், ஆனால் பணியில் இருந்த பெண் காவலர்களிடம் அவர் சிக்கியதாகவும் துணை போலீஸ் ஆணையாளர் தெரிவிக்கிறார்.

இதுவரை அந்த மசூதியிலிருந்த 700 பேருக்கும் அதிகமானவர்கள் சரணடைந்திருந்தாலும், ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இன்னமும் அந்த செம்மசூதியினுள்ளே இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

-BBC Tamil

Pakistani mosque chief caught as troops lay siege | Reuters.com

4 comments:

Anonymous said...

madakkum vidayangalai paarththal pakistanuku sani pidichuttuthu....
well done RAW, CIA and MOSSAD

சீனு said...

ஹூம். பாகிஸ்தானில் உள் நாட்டு சன்டை ஆரம்பித்துள்ளதாகவே தெரிகிறது. இதில் யார் வெற்றி பெருவார்கள் என்பதன் பொருட்டு நமக்கு தான் பிரச்சினையே.

வன்முறையை ஆதரித்த பாகிஸ்தானே அதற்கு இலக்காகி வருகிறாது. 'வன்முறை என்பது இரு பக்கமும் கூர்மையுள்ள ஆயுதம்; அது உபயோகப்படுத்துபவரையும் அழிக்கும்' என்று அறிஞர் அண்ணா சொன்னது தான் நினைவுக்கு வருகிறது :(

Boston Bala said...

from today's BBC Tamil:

இஸ்லாமாபாதின் செம்மசூதி மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில், தீவிர எண்ணம் கொண்ட இஸ்லாமிய மாணவர்கள் சிக்கியுள்ள செம்மசூதி மீது பாதுகாப்பு படையினர் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர்.

மசூதியின் இரு பக்கங்களிலும் கவச வாகனங்கள் உள் சென்றதாகவும், மற்றுமொரு பக்கத்தில் மசூதியின் சுவர் ஒன்றை இராணுவத்தினர் உடைத்ததாகவும் மசூதியின் அருகில் இருக்கின்ற பிபிசி செய்தியாளர் கூறுகின்றார்.

இதில் இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் தீவிர காயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.

முன்னதாக எவ்வித நிபந்தனையும் இன்றி சரண் அடைய வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு கோரி இருந்ததை, மசூதியின் உள்ளே இருக்கும் மூத்த மதப்போதகர் அப்துல் ரஷித் காசி நிராகரித்தார்.

சரண் அடைவதற்கு பதிலாக ஒரு தியாகியாக மடிவதையே தான் விரும்புவதாக அவர் கூறியிருந்தார்.

Unknown said...

சமீபத்திய அல்ஜஸீரா செய்தி 80மாணவர்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாமென தெரிவிக்கிறது.

-o❢o-

b r e a k i n g   n e w s...