.

Thursday, July 5, 2007

எம்.பி.பி.எஸ். படிப்புக் காலத்தை ஆறரை ஆண்டாக அதிகரிக்க தில்லி முடிவு

தமிழகம் உள்பட நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். படிப்புக் காலத்தை அடுத்த கல்வி ஆண்டு முதல் (2008-09) ஆறரை ஆண்டுகளாக அதிகரிக்க மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

கிராமப்புறங்கள் உள்பட மருத்துவ சேவை கிடைக்காத இடங்களில் ஓர் ஆண்டு பணியாற்றினால்தான் ஒரு மாணவர் எம்.பி.பி.எஸ். படிப்பு முடித்த பிறகு டாக்டராகப் பதிவு செய்து கொள்ள முடியும் என்ற நிபந்தனையுடன் படிப்புக் காலத்தை ஆறரை ஆண்டுகளாக அதிகரிக்க அது முடிவு செய்துள்ளது.

தற்போது நான்கரை ஆண்டுகள் மற்றும் மருத்துவ பயிற்சிக் காலம் ஓர் ஆண்டு சேர்த்து மொத்தம் ஐந்தரை ஆண்டுகளாக எம்.பி.பி.எஸ். படிப்புக் காலம் உள்ளது. இந்தச் சட்டத் திருத்தம் நிறைவேறும் நிலையில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமின்றி தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ். படிப்புக் காலம் ஆறரை ஆண்டுகளாக அதிகரிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். கிராமப்புற மருத்துவ சேவையில் ஈடுபடும் டாக்டர்களுக்கு மாதம் ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...