பிரிட்டன் கார் குண்டுவெடிப்பு தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய டாக்டர் ஹனிபா ஒரு மிதவாத இஸ்லாமியரே என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிரிட்டன் கார் குண்டுவெடிப்பு சதித்திட்டம் மற்றும் கிளோஸ்கோ விமான நிலையத்தின்மீதான தாக்குதல் ஆகியவற்றில் தொடர்புடையவராக கைதுசெய்யப்பட்டுள்ள பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் ஹனிபா ஒரு மிதவாத இஸ்லாமியர்தான் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் ஒரு சிறந்த மாணவர் என்று அவர் பயின்ற அம்பேத்கார் மருத்துவ பல்கலைக்கழக பேராசியர்களும் தெரிவித்துள்ளனர். பிரிட்டன் தலைநகர் லண்டனில் கடந்த சனிக்கிழமை வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் ஒன்றை சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் விடுதி ஒன்றின் அருகே விட்டுவிட்டுச் சென்றார். மர்ம நபர் நிறுத்திச் சென்ற காரில் சக்திவாய்ந்த வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட மேலும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்காட்லாந்தின் கிளாக்ஸ்கோ விமான நிலையத்தில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதி தீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இச்சம்பவங்கள் தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த 2 டாக்டர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர். லண்டன் கார் குண்டுவெடிப்பு சதித்திட்டம் மற்றும் ஸ்காட்லாந்து விமான நிலைய கார் குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பு உள்ளதாக பெங்களூரைச் சேர்ந்த இந்திய டாக்டர் ஹனிபா கடந்த திங்கள் அன்று இரவு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார். 27 வயதாகும் ஹனிபா தற்காலிக விசா பெற்று குவின்ஸ்லாந்தில் உள்ள கோல்டுகோஸ்ட் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். அவர் தனது பணியை ராஜினாமா செய்யாமல் பிரிஸ்பேன் விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்ஞீர் வழியாக ஆஸ்திரேலியா திரும்ப விமான டிக்கெட் இல்லாமல் இந்தியா வர முயற்சிக்கும்போது கைதுசெய்யப்பட்டதாகவும் ஆஸ்திரேலிய பிரதமர் ஹோவார்டு நேற்றுமுன்தினம் தெரிவித்தார். ஹனிபா ஆஸ்திரேலியா வருவதற்குமுன் அவருடன் இங்கிலாந்தில் உள்ள லிவர்ஞீல் மருத்துவமனையில் பணிபுரிந்த முகமது ஆசிப் அலி என்ற மற்றொரு மருத்துவரிடமும் இதுதொடர்பாக ஆஸ்திரேலிய போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவருக்கு லண்டன் கார் குண்டுவெடிப்பு சதித்திட்டத்தில் தொடர்பு இல்லை என்பது தெரியவந்ததை அடுத்து போலீசார் அவரை நேற்று விடுதலை செய்தனர். ஆனால் ஹனிபாவை மேலும் 2 நாட்கள் தொடர்ந்து விசாரிக்க அந்நாட்டு ஞிதிமன்றம் உத்தரவு அளித்துள்ளதை அடுத்து அவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. ஆஸ்திரேலிய போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டுவரும் ஹனிபாவின் குடும்பத்தார் இந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஹனிபா மற்ற இந்திய இஸ்லாமியர்களைப்போலவே இஸ்லாமிய மத வழிமுறைகளை பின்பற்றும் மிதவாத இஸ்லாமியர்தான். அவர் நாள்தோறும் 5 முறை தொழுகை செய்வார். மற்றவர்களைப் போலவே மசூதிக்கு சென்று வருவார் என்று அவரது இளைய சகோதிரி சுமையா தெரிவித்தார். அதேபோல் எங்கள் குடும்பமும் அடிப்படை இஸ்லாமிய பழக்கவழக்கங்களை கடைபிடிக்கும் குடும்பம்தான். ஹனிபா இஸ்லாமிய பழமைவாத கொள்கைகளை கடைபிடித்தவர் என்று கூறப்படுவது தவறு. அவருக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்றும் தெரிவித்தார். ஹனிபா டாக்டர் பட்டம் பயின்ற அம்பேத்கார் பல்கலைக்கழக பேராசிரியர்களும் இந்த செய்தியை அறிந்தவுடன் அதிர்ச்சி அடைந்தனர். ஹனிபா ஒரு மிகச்சிறந்த மாணவர். கூர்மையான அறிவாற்றலும், அமைதியான குணமும் உடையவர் என்று தெரிவித்தனர்.
Thursday, July 5, 2007
பிரிட்டன் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்துள்ள ஹனிபா ஒரு மிதவாத இஸ்லாமியரே.
Labels:
குண்டுவெடிப்பு
Posted by Adirai Media at 11:10 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
கிழம்பு கிழம்பு காத்து வரட்டும்...
Post a Comment