.

Friday, August 17, 2007

'தஸ்லிமாவைக் கொல்பவருக்குப் பரிசு' - கொல்கொத்தா இமாம்

அதிர்சியூட்டும் விதமாக பேரணி ஒன்றில் பேசிய கொல்கொத்தா இமாம் ஒருவர் இன்னும் ஒருமாத காலத்துக்குள் பெண் எழுத்தாலர் தஸ்லீ நஸ் ரீனை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் இல்லையேல் அவரைக் கொல்பவருக்கு 'அளவற்ற' (Unlimited) வெகுமானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Imam puts unlimited reward on Taslima's head - Rediff

16 comments:

Anonymous said...

இமாமின் காட்டுமிராண்டித்தனமான பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.கொலை செய்ய தூண்டுதல் குற்றத்தின் கீழ் இவரை கைது செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

Anonymous said...

shocking speech.Is this a secular law abiding country anymore?Shame on this imam.Whole world laughs at him.

Anonymous said...

"போ(பொ)டா"-ன்னு உள்ள தள்ளி வாணாள் முழுக்க களி திங்க வெக்கணும் இந்த வக்கிரம் புடிச்ச காட்டுமிராண்டி கும்பலை.

என்ன துணிச்சல் இருந்தா ஒரு சுதந்தர ஜனநாயக தேசத்துல இப்படில்லாம் பொறுப்பே இல்லாம அறிக்கை விடத்தோணும் ?

செட்டிநாட்டு கவிஞன்தாங்க சரி.

ஜனநாயகத்தை சற்றே நிறுத்தி சவுக்கெடுக்கணும். கோல் எடுத்தாதான் குரங்காடும்.

வெறுப்புடன்
முத்து

PKS said...

அமைதியிலும் ஜனநாயகத்திலும் வன்முறையற்ற பாதையிலும் கருத்து சுதந்திரத்திலும் நம்பிக்கையுடைய - இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்று நம்புகிற இஸ்லாமிய சகோதரர்கள், இத்தகைய காட்டுமிராண்டித்தனமான மிரட்டல்களுக்கு எதிராக வலுவான குரல் கொடுக்க வேண்டும். சட்டம் இந்த இமாம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். - பி.கே. சிவகுமார்

மாசிலா said...

அநாநி : //இமாமின் காட்டுமிராண்டித்தனமான பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.கொலை செய்ய தூண்டுதல் குற்றத்தின் கீழ் இவரை கைது செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்// நானுன் இதை மறுமொழிகிறேன்.

காவல் துறையினர் உடனடியாக அவனை கைது செய்து கொலைக் குற்றத்திற்காக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.

இந்தியா என்ன இவன் அப்பன் வீட்டு சொத்தா? இவன் சொன்ன உடன் தஸ்லிமாவை வெளியேற்றவதற்கு. இது ஜனநாயக நாடென்று அந்த அறிவிலிக்கு தெரியாதோ? அவனுக்கு இந்தியா பிடிக்கவில்லை என்றால் நாதாரி வெளியே போகட்டும்.

பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிட்டது என நினைத்துக்கொள்ளுமாம். அது இவன் ஒருவன் ஏதாவதை மனதில் நினைத்துக் கொண்டு இந்தியா முழுதும் அப்படித்தான் என நினைக்கும் மூதேவி.


கொலை செய்ய தூண்டியதற்காக உடனடியாக உள்ளே தள்ளவேண்டும்.

யோவ், (இ)மாமு இந்தியா பாக்கிஸ்தானும் இல்ல, அரேபியாவும் இல்லைடா காய்மாட்டி! ஓதறத கொஞ்சம் நிறுத்திட்டு சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிகினு அப்றமா அறிக்க விடு (இ)மாமு.

சன்னாசி said...

ரிடிஃபில் இதுகுறித்துப் படித்தபோதே நினைத்தேன். எம்.எஃப் ஹுசேன் தாக்குதல், ஓவியக்கூடத்தைத் தாக்குதல், பால்தாக்கரேவுக்காக அவுட்லுக்கைத் தாக்குதல், தஸ்லிமா மீது தாக்குதல், ஃபத்வா, ருஷ்டிக்கு ஃபத்வா என்று கருத்து சுதந்திரத்தை நசுக்க அலையும் இந்த மதவெறிபிடித்த கும்பல்கள் ஜனநாயக (குறைகளற்ற ஜனநாயகமாக இருக்கவாவது முயலும்) நாடுகள் தரும் சுதந்திரத்தை சுய, சமூக முன்னேற்றத்துக்கு ஆக்கப்பூர்வமாக உபயோகிக்க வக்கில்லாத தேங்காயை உருட்டும் நாய்கள் - தானும் தின்னாமல் அடுத்தவனையும் தின்ன விடாமல். கண்டிக்கப்படவேண்டிய செயல்கள், மிக மோசமான முன்னுதாரணங்கள்

tamilpukkal.blogspot.com/2007/07/blog-post_26.html - இதுகுறித்த எதிர்ப்பு ஒன்று...

Anonymous said...

தஸ்லிமாமீது தாக்குதலை கண்டிக்கும் இடத்தில் லிஸ்டு போடும் அண்ணாச்சி!

தினகரன் பத்திரிக்கை கொலைகளை மட்டும் கவனமாக மறந்துவிட்டாரே!

ஏதோ இந்து பாஸிஸ்டுகளை கண்டிக்க எல்லா இடத்திலும் ஆஜராகும் பால்தாக்கரே அவுட்லுக், எம்.எப் உசேன் சமாச்சாரங்களில் யாரும் செத்ததாகவும் தெரியவில்லை.

ஆனால் மூன்று எஞ்ஜினியர்கள் செத்துப்போன திமுக அராஜகம் மட்டும் கவனமாக மறப்பதென்ன ?

G.Ragavan said...

மிக எளிய சொல்லில் சொல்வதென்றால் இமாமின் பேச்சு கொடூரம். தன்னுடைய பொறுப்பை மறந்து உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறார். இதன் விளைவுகள் உறுதியாக நல்லவையாக இருக்கப் போவதில்லை. அது மட்டும் புரிகிறது.

பிறைநதிபுரத்தான் said...

கொலை மிரட்டல் விடுபவனுக்கு - இமாம் என்ற அடைமொழி ஒரு கேடு.

தாடி மட்டும் வளர்த்து - அறிவை வளர்க்காதவனையெல்லாம் - இமாம் ஆக்கினால் இதுவும் பேசுவானுங்கள் - இன்னமும் பேசுவானுங்கள்..

ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத அவனின் தாடியை பிடித்து இழுத்து - தடியால் அடித்து - சிறையில் அடைக்கவேண்டும்.

G.Ragavan said...

// பிறைநதிபுரத்தான் said...
கொலை மிரட்டல் விடுபவனுக்கு - இமாம் என்ற அடைமொழி ஒரு கேடு.

தாடி மட்டும் வளர்த்து - அறிவை வளர்க்காதவனையெல்லாம் - இமாம் ஆக்கினால் இதுவும் பேசுவானுங்கள் - இன்னமும் பேசுவானுங்கள்..

ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத அவனின் தாடியை பிடித்து இழுத்து - தடியால் அடித்து - சிறையில் அடைக்கவேண்டும். //

இது தவறு. தாடியைப் பிடித்து என்பது தவறு என் கருத்து. தஸ்லீமாவின் சேலையைப் பிடித்து இழு என்பதற்கும் இமாமின் தாடியைப் பிடித்து இழு என்பதற்கும் வேறுபாடு எனக்குத் தெரியவில்லை.

மற்றபடி சட்டப்படியான நடவடிக்கை தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

மாசிலா said...

இந்த (இ)மாமு உடுறாரே உடான்சு, தலைய எடுத்தா நிறைய பணம் தருவேன்னு, மொதல்ல அந்த பணமெல்லாம் எங்கிருந்து வந்ததுன்னு கணக்கு காட்ட முடியுமா?

இந்தியா காவல் மற்றும் நீதி துறையே, (இ)மாமுவை உடனே உள்ளே தள்ளி கம்பி எண்ண வை!

விடாதே! விடாதே!
கொலைகாரனை
சுதந்திரமா விடாதே!

சுல்தான் said...

அவர்களை வெளியேற்று இல்லையேல் போராடுவோம் என்பதோடு நிறுத்தியிருக்கலாம்.

இந்த மாதிரி வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள் மிகவும் கண்டிக்கத் தக்கது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ரகமத்துல்லா said...

கொல்கொத்தா இமாம் ஒரு இஸ்லாமியர். அவர் அமைதி மார்க்கத்தை சேர்ந்தவர். அமைதி மார்க்கத்தை சார்ந்தவர்கள் என்றேனும் மற்றவ்ர்களது தலையை வெட்ட வேண்டும், கொல்ல வேண்டும், மற்றவர்கள் மீது தற்கொலை தாக்குதல் நிகழ்த்தவேண்டும் என்று பேசியிருக்கிறார்களா?

ஆகவே இது ஒரு ஆர். எஸ். எஸ் சதி. வன்முறை மார்க்கமான பௌத்த மதத்தை சார்ந்த ஒருவர் இமாம் போல வேடமணிந்து வந்து இப்படி பேசி அமைதி மார்க்கத்தின் மீது அவதூறு ஏற்படும்படி பேசியிருக்கிறார் என்பது சிறு பிள்ளைக்குக்கூட தெரியும்.

ஆகவே இப்படிப்பட்ட பொய் செய்திகளை எழுதாதீர்கள்.

நவீன் said...

ஒரு ராஜபக்சே, சந்திரிகாவை வைத்து பெளத்த மதத்தை குறை சொல்லக்கூடாது.

ஒரு பின்லேடன், ஒரு கொல்கத்தா இமாமை வைத்து இஸ்லாமை குறை சொல்லக்கூடாது.

அப்படிச் சொல்வது ஒரு மோடியை வைத்து, ஒரு தொகாடியாவை வைத்து இந்துமதத்தை குறை சொல்வது போலாகிவிடும்.

ஆனால், மதத்தை குறை சொல்லும் கலையிலும், வலையிலும் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு இதெல்லாம் ஒரு வாய்ப்பு தான்.

Anonymous said...

ஒரு பெண்பிள்ளையை பத்து ஆம்பளைகள் கும்பலாக போய் அடிப்பது...அடித்து விட்டு அதை வீரம் என்பது..அதற்கு வக்காலத்து வாங்க ஒரு கும்பல் வேறு..

பொம்பளையை கும்பலாக போய் அடிக்க சொல்லித்தான் கடவுள் சொல்லித் தந்தாரா?

Anonymous said...

//ஒரு பெண்பிள்ளையை பத்து ஆம்பளைகள் கும்பலாக போய் அடிப்பது...அடித்து விட்டு அதை வீரம் என்பது..அதற்கு வக்காலத்து வாங்க ஒரு கும்பல் வேறு..

பொம்பளையை கும்பலாக போய் அடிக்க சொல்லித்தான் கடவுள் சொல்லித் தந்தாரா? //

குஷ்பு-கற்பு-மேட்டரும் ஞாபகத்துக்கு வரவெச்சிட்டீங்களேய்யா....

-o❢o-

b r e a k i n g   n e w s...