அமெரிக்காவில் 'அமெரிக்கன் ஐடல்' எனும் பாடல் போட்டி ஃபாக்ஸ் தொலைக்காட்சியால் நடத்தப்படுகிறது. இதில் முதன் முறையாக இறுதிச் சுற்றுக்களில் பங்கெடுக்க இந்தியர் , சஞ்சையா மலக்கர், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
'அமெரிக்கன் ஐடல்' நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் பொதுமக்களும் வாக்களித்து போட்டியாளரின் வெற்றி வாய்ப்ப்பை அதிகரிக்கச் செய்யலாம்.
சஞ்சையா பற்றிய விபரங்கள்
இன்று மாலை அமெரிக்க நேரம் 8/7C ஒலிபரப்பப்பட இருக்கிறது.
Wednesday, February 21, 2007
அமெரிக்கன் ஐடலில் இந்தியர்
Posted by சிறில் அலெக்ஸ் at 4:56 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
3 comments:
சிறில்,
எனக்கு ஷியாமளியின் குரலும் மிகவும் பிடித்தே இருந்தது... சஞ்சையா, ஷியாமளி இருவரின் பெற்றோர் இந்தியர்களாக இருக்கலாம். ஆனால் இங்கே பிறந்து இங்கேயே வளர்ந்த இவர்களை இந்தியர்கள் என்று சொல்வது பொருந்துமா?
பொதுவாக சாதனை எதுவும் நிகழ்த்தப்படும்போது அவர்களுக்கு இருக்கும் ஏதோ ஒரு தொடர்பை வைத்து "ஆஹா இந்தியர்கள்" என்று கொண்டாடுவதை நான் வெறுக்கிறேன். அதில் என்ன பெருமை இருக்க முடியும் என்று எனக்கு புரியவில்லை. இப்படித்தான் V.S.Naipal ஐ கொண்டாடிக்கொண்டிருந்தோம். அவர் இந்தியாவை பற்றி கேவலமாக பேசும் வரை (இன்னமும் கொண்டாடுபவர்கள் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்)
அவர்கள் திறமையை நாம் ரசிக்கலாம், மதிக்கலாம், போற்றலாம். அதற்காக, எதற்காக அவர்களை நமது தேசத்தோடு சேர்த்து வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே எனது கேள்வி...
முகமூடி,
ஒரு யோசிக்க வேண்டிய விஷயம்தான். இவர் இந்திய வம்சாவழியினர் என்பதை உறுதிசெய்ய இயலாமல் போனது.
இப்ப சென்னையில் இருக்கும் இன்னொரு நாகர்கோவில்காரர்,பல தலைமுறைகளாய் இருந்தாலும், இன்னொரு நாகர் கோவில்காரரைப் பார்த்தா ஒரு உணர்ச்சி வருவதில்லையா. அதுபோலன்னு வச்சிக்கலாம்.
உங்க கருத்துக்கு நன்றி.
சஞசயா இன்னிக்கு சரியா பாடல சிரில்,பதினேழு வயசு சின்ன பைய்யன்...மூணு ஜட்ஜுமே சரியா விமர்சனம் தரல அழகா சிரிச்சிகிட்டே simon அடிச்ச comments he took it in the right spirits... அடுத்த ரவுண்ட் போரது கஷ்டம்தான்.
Post a Comment