அமிதாப்்தாப் சக்கரவர்த்தி. நான் வெறும் அரசன். அவர் முன் நான் சாதரணமானவன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
Friday, June 15, 2007
ரஜினி பரபரப்பு பேட்டி- வீடியோ
Labels:
இந்தியா,
குறும்படம்,
சினிமா
Posted by சிவபாலன் at 1:31 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
8 comments:
ரஜினி மிகவும் சந்தோசமாக காணப்படுகிறார். அப்போ சிவாஜி மெக கிட் போல்..
ரஜினியோட இன்னுமொரு சாதா ரண ஒரு மினி-பேட்டி அவ்வளவுதான். இதுல பரபரக்க என்ன இருக்கு? ரஜினின்னவுடனே இந்த மீடியாவும் நீங்களும் பண்ற இம்சை தாங்க முடியலப்பா...
ஆனா ரஜினியும் பேச கத்துகிட்டாரு போல... முந்தியா இருந்தா அமிதாப் பேரரசன், நான் ஒரு பிச்சைக்காரன்னு சொல்வாரு... இப்ப சைக்கிள் கேப்புல தன்னத்தானே மன்னன்னு சொல்லிக்கிறாரு :)))
சற்றுமுன்னுக்கு 'பரபரப்பு' தேவையில்லை. ஏதோ நல்லா சட்டுனு 4 வரில விஷயத்தை தெரிஞ்சுக்க வரோம்.அப்புறமா, தினத்தந்தி மாதிரி கண்டுக்காம போறதுக்கு வாயப்பு இருக்கு
அய்யா,
இது ரஜினியின் VERY HOT பேட்டிதான். சினிமா பொழுதுபோக்கு என வைக்ப்படுத்தியுள்ளோம். சினிமா என்றாலே பரபரப்புதானே..
எனினும் நீங்க சொன்ன கருத்து அலோசிக்கப்படும்.
கருத்து கூறிய முகமூடி, Sathia அவர்களுக்கு நன்றி
அடுத்து, "சதக் சதக்" என்று குத்தினார், "திடுக் தகவல்" பாணியில கூட தலைப்பு வைக்கலாம் :)
இதுல ஒரு பரபரப்பும் இல்லை..
ரவிசங்கர் அய்யா
சந்திரபாபு நாயுடு மூன்றாவது அணிக்கு ரஜினியை வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். தெரிந்ததே. அந்நிலையில் அவர் அரசியல் பிரவேசம் பற்றி நிருபர் கருத்து கேட்டிருக்கிறார். அது வீடியோவில் இருக்கிறது. பார்க்கவில்லையா.
இதில் எங்க அய்யா சதக் சதக் எல்லாம் வந்தது. சினிமா பொழுதுபோக்கு என்று தலைப்பு வைத்தும் இது போன்ற கேலியான கருத்துக்கள் தேவை இல்லை என்பது என் எண்ணம்.
அய்யா சாமி, ரஜினியைவிட இவங்க ரவுசு தாங்க முடியல.
முடிஞ்சா இந்த சுட்டியையும் போய் பாருங்க..
http://www.hindu.com/2007/06/15/stories/2007061510810100.htm
ச்சோ கண்ணு கட்டுதே.. ம்ம்ம்..
சுப்பர் ஸ்ரார் என்கின்ற ஆங்கில சொற்தொடரை தனது பெருமையாகக் கொண்டிருக்கும் சிவாஜிராவ் என்கின்ற கன்னடனை முன்னிறுத்தி செயற்படுகின்ற இந்த ஆர்ப்பாட்டங்களின் ஊடாக தமிழன் எவ்வாறு திசை திருப்பப்பட்டு அவனது பண்பாடும் எதிர்காலமும் எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பது குறித்து பலருக்கு அக்கறை இல்லை.
கலைஞர் கருணாநிதியின் படைப்பில் எம்ஜிஆர் அவர்கள் நடித்த காஞ்சித் தலைவன்" என்ற திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்பட்டது. அதில் கன்னட மன்னன் ஒருவனை தாழ்த்தி சில வசனங்கள் சொல்லப்பட்டிருந்தன.
இதற்கு தங்கள் கன்னடத்தை (கண்டனத்தை) காட்டுவதற்காக தமிழர்களின் பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அதனை முன்னின்று செய்தவர் யார் தெரியுமா? வேறு யாருமில்லை. தமிழ்நாட்டின் இன்றைய சுப்பர் ஸ்ரார் ரஜனிகாந்தான் அதை முன்னின்று செய்தார். இன்றைய தினம் வரை ரஜனிகாந்த் கன்னட பாதுகாப்பு இயக்கத்தின்" உறுப்பினராகத்தான் இருக்கிறார். அவருடைய அண்ணன் சத்தியநாராயணா இந்த இயக்கத்தின் ஒரு அமைப்பாளராகவும் இருக்கின்றார்.
இது குறித்து கன்னட தீவிரவாத இயக்கமான சளுவளி இயக்கத்தின் தலைவரான வட்டாள் நாகராஜ் 1992 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி வெளிவந்த சுடச் சுடச் செய்தி" என்ற பத்திரிகைக்கு தெளிவாகவே செவ்வி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவிக்கையில் இங்கே தமிழர்களின் கடைகளை அடித்து நொருக்குவதற்கு சிவாஜிராவ்தான் முன்னணியில் நிற்பான் ஏனென்றால் அவனுக்கு தமிழர்களை கண்டாலே பிடிக்காது சிவாஜிராவ் நம்ம பையன் அவரை நாம் புரிந்து கொள்ள வேண்டும் அத்தோடு சத்தியநாராயணாவின் பிள்ளைகள் கன்னட இளைஞர் முன்னணி" என்ற அமைப்பையும் ஆரம்பித்துள்ளார்கள் அப்படி ரஜனிகாந்தின் குடும்பமே கன்னடர்களுக்கு ஆதரவாக உள்ளது தன்னுடைய படம் தமிழ்நாட்டில் ஓட வேண்டும் என்பதற்காக அவர் செய்கின்ற தமிழர் ஆதரவுப் பேச்சுக்களை நாம் பொருட்படுத்தக் கூடாது.
அனானி
நீங்கள் கூறி இருக்கும் கருத்து அதிர்ச்சியளிக்கிறது.
Post a Comment