ரஜினிக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு.
நேற்று "சிவாஜி'' படத்தின் விசேஷ காட்சி ஐதராபாத்தில் உள்ள பிரசாத் பிரிவிï தியேட்டரில் நடந்தது. ஆந்திர மாநில முன்னாள் முதல்- மந்திரியும், தெலுங்குதேசம் கட்சித்தலைவருமான சந்திரபாபு நாயுடு நடிகர் ரஜினியுடன் படம் பார்த்தார்.சிவாஜி படம் மிகவும் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை வலுவான ஒரு சமூக நல கருத்தை வலியுறுத்துவதாக உள்ளது. கறுப்பு பணத்தால் உண்டாகும் தீமை நன்றாக படமாக்கப்பட்டுள்ளது. ரஜினியின் வித்தியாசமான ஸ்டைல்கள் ரசிகர்களை கவரும். இது வரலாற்றில் இடம் பெறும்.ரஜினி என் நீண்டநாள் நண்பர். அவரது ஒவ்வெரு படமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் கூட அவர் படத்துக்கு வரவேற்பு உள்ளது.ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று நான் ஏற்கனவே பல தடவை அழைத்து இருக்கிறேன். இப்போதும் 3-வது அணிக்கு வரவேண்டும் என்று அழைக்கிறேன். அப்படி அவர் வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.ஆனால் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க வேண்டியது ரஜினிதான்.இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார். இதையடுத்து கூறியதாவது
சந்திரபாபு நாயுடு என் சிறந்த நண்பர்களில் ஒருவர். அவரால் நான் நடித்த சந்திரமுகி படம் பார்க்க முடியாமல் போய் விட்டது. எனவே இந்த தடவை "சிவாஜி''யை பார்க்க அழைத்தேன் அரசியல் பற்றி நான் இப்போது பேசவரவில்லை. `சிவாஜி' படத்தை காட்டவே வந்துள்ளேன். எனக்கு ஆதரவளித்ததற்காக சந்திர பாபுநாயுடுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு நடிகர் ரஜினி காந்த் கூறினார்.
1 comment:
படம் ஹிட் என்றால் அரசியல் அழைப்பும் கூடவே வரும் போல :))
Post a Comment