மதுரை மேற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே.ராஜேந்திரனை ஆதரித்து இன்று 28-வது வார்டு பகுதியான எஸ்.எஸ்.காலனியில் பிரசாரம் செய் தார். முன்னதாக அவர் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
கடந்த ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியிலும், அன்னை சோனியாகாந்தி வழி காட்டுதலின் படி நடை பெறும் மத்திய அரசும், தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தென் மாவட்டம் கேட்பாற்ற கிடந்த காலம் மாறி தற்போது நிறைய திட்டங்கள் தென் மாவட்டத்தில் நடந்து வருகிறது. குறிப்பாக மதுரையில் தொழில் நகரமாக மாற்ற திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க குடிநீர் திட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடர மேற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மேற்கு தொகுதி இடைத்தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் இலவச டெலிவிஷன் வழங்கப்படும்.
மாலைமலர்
Friday, June 15, 2007
மதுரை மேற்கு தொகுதி தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் டெலிவிஷன் அமைச்சர் தங்கம் தென்னரசு பிரசாரம்
Posted by
Boston Bala
at
11:06 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment