தகவல் தொடர்பில் தொலைபேசிகள் வருவதற்கு முன்பு அவசரத்துக்கு உதவியது தந்தி. தபால் தந்தித் துறையின் கீழ் இருந்த தந்தி பிஎஸ்என்எல் நிறுவனம் உருவாக்கப் பட்ட போது அந்நிறுவனத்தின் பொறுப்பில் வந்தது. தகவல் தொடர்புகள் தொலைபேசி, செல்பேசி, மின்னஞ்சல் என பரந்து விட்ட நிலையில் தந்தி அனுப்புவோர் மிகவும் குறைந்து விட்டனர். எனவே பிஎஸ்என்எல் நிறுவனம் சிறுகச் சிறுக தந்தி அலுவலகங்களை குறைத்து தற்போது முற்றிலும் தந்தி சேவை நிறுத்தப் படுவதாக அறிவித்து விட்டது.
2 comments:
இனி தண்ணி அடிக்க முடியாது ன்னு சொல்லி குடிமகன் வயிற்றில் கள்ளைக் கறைக்காமல் இருக்கிறார்களே... என்று மகிழ்வுறலாம் !
:)
நல்லதொரு சேவை.
கணக்கே இல்லாமல் லட்சக்கணக்கான மக்களுக்கு செய்தி தாங்கிச் சென்ற வழி.
கட்டுக் கட கட என்று எங்கள்
அவசர சங்கேத மொழியாகக் கூட உதவி இருக்கிறது:-0)
Post a Comment