.

Thursday, April 12, 2007

வங்க தேசத்தின் முன்னாள் பிரதமர் மீது கொலைக் குற்றச்சாட்டு

வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா மீது அந்நாட்டு போலீசார் கொலைக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற அரசியல் வன்முறையில் நான்கு பேர் கொல்லப்பட்டது தொடர்பில் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

அவரைத் தவிர அவரது கட்சியான அவாமி லீகைச் சேர்ந்த 46 பேர் மீதும் குற்றப் பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே சம்பவம் தொடர்பாக இஸ்லாமியக் குழுவான ஜமாத் ஏ இஸ்லாமி அமப்பின் தலைவரும் மேலும் அந்தக் குழுவின் நான்கு பேர் மீதும் வன்முறையைத் தூண்டியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளனர்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் ஷேக் ஹசீனா பிபிசியின் வங்க மொழி சேவைக்கு அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் தம் மீதான குற்றச்சாட்டினை மறுத்துள்ளார். தான் யாரையும் கொலை செய்யவில்லை என்பது வங்கதேச மக்களுக்கு நன்றாகத் தெரியும் எனவும், இவ்விதமான நடவடிக்கைகள் தம்மீது பொய் குற்றச்சாட்டுகளை வைக்க எடுக்கும் முயற்சி எனவும் கூறியுள்ளார்.

சமபவம் நடந்த நாளில் ஜமாத் கட்சியினரும், வங்கதேச தேசியக் கட்சியினரும் தமது கட்சியினர் நடத்திய ஊர்வலத்தின் மீது பலத்த தாக்குதல்களை நடத்தினர் எனவும், இதை போலீசார் கண்டும் காணாமல் இருந்தார்கள் எனவும் ஷேக் ஹசீனா கருத்துக் கூறியுள்ளார். எனவே இந்த வன்முறைகளுக்கு வங்கதேச தேசியக் கட்சியும், ஜமாத் கட்சியுமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் வலியுறித்தியுள்ளார்.

இது போன்ற குற்றச்சாட்டுகளை வைப்பதன் மூலம் தாம் தமது நாட்டிற்கு திரும்புவதை தடுக்க வங்கதேசஅதிகாரிகள் எண்ணுவார்களேயானால் அவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருப்பதாகத்தான் பொருள் எனவும் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.

BBC

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...