.

Tuesday, April 24, 2007

பிரான்ஸ் புறப்பட்டார் கலாம்.

ஜனாதிபதி அப்துல்கலாம் ஐந்து நாள் பயணமாக ஸ்டாரஸ்பர்க்(பிரான்ஸ்), கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு இன்று புறப்பட்டார். பிரான்ஸ் செல்லும் கலாம், நாளை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். நாடுகளின் ஒற்றுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார். இதற்கு முன்பாக ஸ்டாரஸ்பர்க் நகரில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வுமைய பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து கிரீஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்.ஜனாதிபதியின் கிரீஸ் பயணத்தின்போது, மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணம் மூலமாக இருதரப்பு நல்லுறவுகள் மேலும் வலுப்படும் என நம்பப்படுகிறது.21 ஆண்டுகளுக்குப் பிறகு கிரீஸ் நாட்டுக்கு கலாம் விஜயம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : YAHOO TAMIL

1 comment:

மாசிலா said...

பிரான்சில் தற்போதைக்கு அதிபர் தேர்தலுக்கான தேர்தல் நல்ல சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் இதைப்பற்றி ஒரு செய்தியும் இங்கு எடுபடவில்லை. மேலும் தற்போதைய விரைவில் பதவி துறக்கப்போகும் அதிபர் மக்களிடம் இருந்த அனைத்து மதிப்பையும் இழந்தவர். பிரான்ஸ் எப்போதுமே இந்தியா, அதன் பொருளாதார வளர்ச்சி, அங்கு முதலீடுகள் போன்றவாகளில் போதிய கவனம் செலுத்தியதே இல்லை. பொதுவாகவே இந்தியாவைப் பற்றி இங்கு இருப்பவர்களுக்கு எதுவுமே பிரமாதமாக தெரியாது. பிரஞ்ச் நாட்டவர்கள் பொதுவாகவே தாங்கள் ஒசத்தி, அதிபுத்திசாலி, மேன்மையானவர்கள், அழகான மொழி, உயரிய வரலாறு அப்படி இப்படி என்று பிதற்றிக்கொள்வதில் வல்லவர்கள். முன்பொரு காலத்தில் தென் இந்தியாவில் காலனிகள் வைத்திருந்த பிரஞ்ச் காரர்கள் விடுதலைக்குப்பின் இந்தியா மீது எந்த வித அக்கறையும் காட்டாதது மிகவும் வருந்தத் தக்கதே. இனி வரப்போகிற புதிய அதிபராவது நிலமையை சீர் செய்வாரென நம்புவோம்.

-o❢o-

b r e a k i n g   n e w s...