.

Wednesday, April 25, 2007

2004-ல் "இந்தியா ஒளிர்கிறது' என்று பாஜக பிரசாரம் செய்தது தவறுதான்: அத்வானி

புணே, ஏப். 24: 2004-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் "இந்தியா ஒளிர்கிறது' என்று பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது தவறுதான் என்று கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி தெரிவித்தார்:

"சென்ற மக்களவைத் தேர்தலில் இந்தியா ஒளிர்கிறது என்று பிரகடனப்படுத்தி பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது தவறு. அதற்கு பதிலாக "இந்தியா எழுச்சி பெறுகிறது' என்று பிரசாரம் செய்திருக்கலாம். அதுதான் உண்மை.

தில்லியில் சமீபத்தில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனரில் "இந்தியா எழுச்சி பெறுகிறது' என்று எழுதிவைக்கப்பட்டிருந்தது. அப்போது எனக்கு இந்தியா ஒளிர்கிறது என்பதற்கு பதிலாக இந்தியா எழுச்சி பெறுகிறது என்று கூறி தேர்தல் பிரசாரம் செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று தோன்றியது என்று அத்வானி கூறினார்.

2009-ம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலுக்கு "இந்தியா எழுச்சி பெறுகிறது' என்ற வாசகத்தை பிரகடனப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்யப்படுமா என்று கேட்டதற்கு, உங்கள் யோசனையை வரவேற்கிறேன். ஆனால் அடுத்த தேர்தலுக்கு என்ன உத்தி கையாளப்படும் என்று இப்போதே சொல்லுவதற்கில்லை என்று அத்வானி கூறினார்.

பாஜகவின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரமோத் மகாஜன் சுடப்பட்ட முதலாண்டு நிகழ்ச்சி புணேயில் நடைபெற்றது. இதில் அத்வானி கலந்துகொண்டார். கடந்த பொதுத் தேர்தலின்போது "இந்தியா ஒளிர்கிறது' என்ற பாஜக தேர்தல் பிரசார வாசகம் உருவாகக் காரணமாக இருந்தவர்களில் மகாஜனும் ஒருவர். இந்நிலையில் அத்வானி இப்போது அதுபற்றி கருத்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது."

Dinamani

1 comment:

Anonymous said...

அவர்களின் ஆட்சி காலத்தில் இந்தியா ஒளிர்கிறது என பிரச்சாரம் செய்யப்பட்டது ஆனால் அவர்கள் ஆட்சிசெய்த பொழுது உண்மையில் "இந்தியா ஒளிகிறது" காரணம் உலக வங்கிகளில் அதிக கடன் வாங்கியதற்க்காக.

-o❢o-

b r e a k i n g   n e w s...