உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில்,பிரதமர் மன்மோகன் சிங்கை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன்சிங் இன்று சந்தித்துப் பேசினார். ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இவ்வாண்டு நடைபெறும் மாணவர் சேர்க்கையின் போது, பொதுப் பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பாதிக்க்கப்படாமல் இருப்பது குறித்து இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.பிரதமரை சந்திப்பதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன்சிங், இட ஒதுக்கீடு வழக்கை முன்னதாகவே விசாரிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் மாறுபட்ட தன்மை நிலவுகிறது என்றார். வழக்கை முன்கூட்டியே விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்தின் முடிவு வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்ட அவர், இதனால் இட ஒதுக்கீடு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின் போது பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பாதிக்கப்படாமல் இருப்பது குறித்து, பிரதமருடன் ஆலோசனை நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.
Wednesday, April 25, 2007
இட ஒதுக்கீடு: பிரதமருடன் அர்ஜுன்சிங் சந்திப்பு.
Labels:
இடஒதுக்கீடு
Posted by Adirai Media at 4:16 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
3 comments:
இவர்கள் அடிக்கிற கோட்டாவில் பிற்படுத்தப்பட்டோர் மட்டுமல்ல. அனைத்து மாணவர்களும் பெற்றோர்களுமே பாதிக்க்பபடுகிறார்கள். டிசம்பர் மாதம் கழிந்தால் அட்மிஷன் பத்தி எந்த அரசியல்வாதியும் பேசக்கூடாது என்று தடை போடலாமா :)
very good..............
//அனைத்து மாணவர்களும் பெற்றோர்களுமே பாதிக்க்பபடுகிறார்கள்.//
இல்லை. இது தவரானது
டிசம்பர் மாதம் கழிந்தால் அட்மிஷன் பத்தி எந்த அரசியல்வாதியும் பேசக்கூடாது என்று தடை போடலாமா
பார்ப்பன பணியா கும்பல் நீதிபதிகள் பேசக்கூடாது என்று தடைபோடலாம்.
CNN IBN, NDTV, உள்ளிட்ட பார்ப்பன ஆதரவு செய்தி ஊடகங்களுக்கும் தடை விதிக்கலாம்.
Post a Comment