.

Saturday, March 17, 2007

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கான ஆதரவை விலக்கியுள்ளது மதிமுக

இந்திய நடுவணரசில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கான தனது ஆதரவை விலக்கிக்கொள்வதாக வைகோ தலைமையிலான மதிமுக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குறைந்தபட்ச பொது வேலைதிட்டத்தில் கூறப்பட்டுள்ள பல விடயங்களை, கடந்த மூன்று ஆண்டுகளாக, ஐக்கிய முற்போகு கூட்டணி அரசு நிறைவேற்றவில்லை என்பதால் அதற்கான ஆதரவை திரும்பப்பெறுவதாக, கோவையில் நடந்த மதிமுகவின் மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதிமுக சார்பில் 17 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக இந்த தீர்மானம் பட்டியலிட்டுள்ளது. மாநில சுயாட்சிக்கு ஆதரவாக இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவது, இந்திய நதிகளை இணைப்பதன் மூலம் தமிழக விவசாயிகளின் நீர்பற்றாக்குறையை போக்குவது, அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இருக்கும் தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளையும் ஆட்சிமொழிகளாக அறிவிப்பது போன்ற மதிமுகவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று இந்த தீர்மானம் குற்றம் சாட்டுகிறது.

BBCTamil.com

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...